Privacy policyதனியுரிமைக் கொள்கை
Tamil Hymns is a free, independent project designed and built by Lokesh Richards (Malaysia). This policy covers every version: the website (sdahymn.app) and the Microsoft Store and Google Play apps.
Tamil Hymns ஒரு சுயாதீன, இலவச திட்டம்; லோகேஷ் ரிச்சர்ட்ஸ் (மலேசியா) வடிவமைத்து உருவாக்கியது. இணையதளம் (sdahymn.app), Microsoft Store, Google Play என எல்லாப் பதிப்புகளுக்கும் இந்தக் கொள்கை பொருந்தும்.
We never ask for your name, email or other personal details. There are no accounts and no ads. To understand how many people use the app, which pages and songs they open, what they search for and from which countries, we use Cloudflare Web Analytics and Google Analytics. Google Analytics uses cookies, and Google processes data such as the pages viewed, device type and approximate location (country / city). We do not use it to identify you and never sell it. You can block it in your browser settings.
உங்கள் பெயர், மின்னஞ்சல் போன்ற தனிப்பட்ட தகவல் எதையும் நாங்கள் கேட்பதில்லை. கணக்கு, விளம்பரம் எதுவும் இல்லை. எத்தனை பேர், எந்தப் பக்கங்களையும் பாடல்களையும், எந்த நாடுகளிலிருந்து பயன்படுத்துகிறார்கள், என்ன தேடுகிறார்கள் என்று அறிய Cloudflare Web Analytics மற்றும் Google Analytics பயன்படுத்துகிறோம். Google Analytics குக்கீகளைப் பயன்படுத்துகிறது; பார்த்த பக்கங்கள், சாதன வகை, தோராயமான இடம் (நாடு / நகரம்) போன்றவற்றை Google செயலாக்குகிறது. உங்களை அடையாளம் காண இவற்றை நாங்கள் பயன்படுத்துவதில்லை, விற்பதுமில்லை. உலாவி அமைப்புகளில் இதைத் தடுக்கலாம்.
Favourites, recent songs, this week's songs and display settings are stored only on your device.
பிடித்தவை, சமீபத்திய பாடல்கள், இந்த வாரப் பாடல்கள், எழுத்து அளவு போன்ற அமைப்புகள் உங்கள் சாதனத்தில் மட்டுமே சேமிக்கப்படும்.
If you use "My location" for Sabbath times, your location is worked out and kept on your device. It is never sent to us.
ஓய்வுநாள் நேரங்களுக்கு "என் இருப்பிடம்" பயன்படுத்தினால், உங்கள் இருப்பிடம் உங்கள் சாதனத்திலேயே கணக்கிடப்பட்டு அங்கேயே சேமிக்கப்படும்; எங்களுக்கு அனுப்பப்படுவதில்லை.
To receive new or corrected songs, the app downloads the song list from our server. Nothing about you is sent with it. Like any website, our host Cloudflare may keep standard technical logs, such as IP addresses, for a short time for security.
புதிய அல்லது திருத்திய பாடல்களைப் பெற, செயலி எங்கள் சர்வரிலிருந்து பாடல் பட்டியலைப் பதிவிறக்கும். அதில் உங்களைப் பற்றிய எந்தத் தகவலும் அனுப்பப்படுவதில்லை. எந்த இணையதளத்தையும் போல, எங்கள் ஹோஸ்ட் Cloudflare பாதுகாப்புக்காக IP முகவரி போன்ற தொழில்நுட்பப் பதிவுகளைக் குறுகிய காலம் வைத்திருக்கலாம்.
What you write in the feedback form (and your name and email, if you give them) is emailed only to us and used only to reply to you. Cloudflare Turnstile is used to block spam.
கருத்துப் படிவத்தில் நீங்கள் எழுதுவது (பெயர், மின்னஞ்சல் தந்தால் அவையும்) மின்னஞ்சலாக எங்களுக்கு மட்டுமே அனுப்பப்படும்; பதில் அளிக்க மட்டுமே பயன்படுத்தப்படும். ஸ்பேமைத் தடுக்க Cloudflare Turnstile பயன்படுத்தப்படுகிறது.
If you turn on the daily prayer reminder, we store only your browser's notification address, your time zone and the time you chose — no name, email or location. Turning the reminder off deletes them. A calendar reminder lives only in your own calendar.
தினசரி ஜெப நினைவூட்டலை இயக்கினால், உங்கள் உலாவியின் அறிவிப்பு முகவரி, நேர மண்டலம், நீங்கள் தேர்ந்த நேரம் மட்டுமே சேமிக்கப்படும் — பெயர், மின்னஞ்சல், இருப்பிடம் எதுவும் இல்லை. நினைவூட்டலை நிறுத்தினால் அவை நீக்கப்படும். காலெண்டர் நினைவூட்டல் உங்கள் காலெண்டரில் மட்டுமே இருக்கும்.
Tamil Hymns is suitable for all ages. We do not knowingly collect personal information from children.
Tamil Hymns எல்லா வயதினருக்கும் ஏற்றது. குழந்தைகளிடமிருந்து தெரிந்தே எந்தத் தனிப்பட்ட தகவலையும் நாங்கள் சேகரிப்பதில்லை.
If this policy changes, the new version will be posted here with a new date. For questions, use the feedback form in the app.
இந்தக் கொள்கை மாறினால், புதிய பதிப்பு இதே பக்கத்தில் புதிய தேதியுடன் வெளியிடப்படும். கேள்விகளுக்கு செயலியில் உள்ள கருத்துப் படிவத்தைப் பயன்படுத்துங்கள்.