தெய்வ கிருபையைத் தேடி;Theiva kirupaiyaith thaedi;
பாவி, மனந்திரும்பு;Paavi, manandhirumbu;
மீட்பர் தரும் ஈவை நாடிMeetpar tharum eevai naadi
தூக்கம் விட்டெழுந்திரு.Thookkam vittezhundhiru.
வாசலானதோ இடுக்கம்;Vaasalaanadho idukkam;
தாழ்மையாகி உட்படு;Thaazhmaiyaagi utpadu;
ஜீவ வழியோ நெருக்கம்,Jeeva vazhiyo nerukkam,
லோக நேசத்தை விடு.Loga naesaththai vidu.
மாம்சம், லோகம், ஆசா பாசம்,Maamsam, logam, aasaa paasam,
பாவம் யாவும் அகற்றி,Paavam yaavum agatri,
ஏசுவில் மெய் விசுவாசம்Esuvil mei visuvaasam
வைத்து உன்னை ஒப்புவி.Vaiththu unnai oppuvi.
கர்த்தர் உன்னைத் தயவாகKarththar unnaith dhayavaaga
ஏற்றுக் கொண்ட பிறகு,Etruk konda piragu,
ஜெபத்தோடு விழிப்பாகJepaththodu vizhippaaga
அவரில் நிலைத்திரு.Avaril nilaiththiru.
ஜீவனுள்ள நாள் மட்டாகJeevanulla naal mattaaga
மோசங்கள் இருப்பினும்,Mosangal iruppinum,
தேவ கரம் பெலமாகDeva karam pelamaaga
உன்னைக் காத்து நடத்தும்.Unnaik kaaththu nadaththum.