Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #435

திவ்ய ஐக்கியத்தில் நிலைப்போமேயாகில்

When We Walk with the Lord · Dhivya aikkiyaththil nilaippomaeyaagil

கீழ்ப்படிதல் · Obedience · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

திவ்ய ஐக்கியத்தில் நிலைப்போமேயாகில்;Dhivya aikkiyaththil nilaippomaeyaagil;

அருள் ஜோதியிலே நடப்போம்;Arul jothiyilae nadappom;

வல்ல ஆவியினால், தேவ சித்தஞ் செய்தால்,Valla aaviyinaal, Deva siththanj seidhaal,

பெரும் பாக்யம் பெற்றே வாழுவோம்.Perum paakyam petrae vaazhuvom.

கீழ்ப்படிவோம்; தேவ சித்தம் செய்வோம்;Keezhppadivom; Deva siththam seivom;

திருவாக்கை எப்போதும்Thiruvaakkai eppodhum

நம்பிக் கீழ்ப்படிவோம்.Nambik keezhppadivom.

சரணம் 2 · Verse 2

மேகம் தோன்றுமானால், அன்பின் சூரியனால்;Maegam thondrumaanaal, anbin sooriyanaal;

அது நில்லாமல் மறைந்தேபோம்Adhu nillaamal maraindhaepom

சோர்பு சந்தேகமும்! அவ நம்பிக்கையும்,Sorbu sandhaegamum! Ava nambikkaiyum,

அணுகாமலே முன் செல்லுவோம்.Anugaamalae mun selluvom.

சரணம் 3 · Verse 3

எந்த வேலையிலும் இன்ப துன்பத்திலும்Endha vaelaiyilum inba thunbaththilum

அருள் நாதர் சகாயஞ் செய்வார்;Arul Naathar sagaayanj seivaar;

வரும் சோதனையோ,மனோ சஞ்சலமோ,Varum sodhanaiyo,mano sanjalamo,

இவை நீக்கியே பாதுகாப்பார்.Ivai neekkiyae paadhugaappaar.

சரணம் 4 · Verse 4

நம்பிக் கீழ்படிந்தே திருப்பாதத்திலேNambik keezhbadindhae thiruppaadhaththilae

நம்மை முற்றிலும் ஒப்புவிப்போம்;Nammai mutrilum oppuvippom;

பெரு நன்மை ஈவார்,அபிஷேகஞ் செய்வார்,Peru nanmai eevaar,apishaeganj seivaar,

தேவ ஆவியைப் பெற்றுக்கொள்வோம்Deva aaviyaip petrukkolvom

சரணம் 5 · Verse 5

கர்த்தரோடின்பமாய் அந்நியோந்நியமாய்Karththarodinbamaai anniyonniyamaai

நீங்காமலே வாசஞ் செய்குவோம்;Neengaamalae vaasanj seiguvom;

அவர் சொற்படியே,உண்மையோடுடனே,Avar sorpadiyae,unmaiyodudanae,

மனோற்சாகமாய்க் கீழ்ப்படிவோம்.Manorchaagamaaik keezhppadivom.