Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #103

நல் மீட்பர் இயேசு நாமமே

How Sweet the Name of Jesus · Nal Meetpar Yesu naamamae

கிறிஸ்துவின் பிறப்பு · Christ's Birth · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

நல் மீட்பர் இயேசு நாமமேNal Meetpar Yesu naamamae

என் காதுக்கின்பமாம்;En kaadhukkinbamaam;

புண்பட்ட நெஞ்சை ஆற்றவேPunbatta nenjai aatravae

ஊற்றுண்ட தைலமாய்.Ootrunda thailamaai.

சரணம் 2 · Verse 2

அந்நாமம் நைந்த ஆவியைAnnaamam naindha aaviyai

நன்றாகத் தேற்றுமே;Nandraagath thaetrumae;

துக்கத்தால் தோய்ந்த உள்ளத்தைத்Thukkaththaal thoindha ullaththaith

திடப்படுத்துமே.Thidappaduththumae.

சரணம் 3 · Verse 3

பசித்த ஆத்துமாவுக்குPasiththa aaththumaavukku

மன்னாவைப் போலாகும்;Mannaavaip polaagum;

இளைத்துப்போன ஆவிக்குIlaiththuppona aavikku

ஆரோக்யம் தந்திடும்.Aarokyam thandhidum.

சரணம் 4 · Verse 4

என் ரட்சகா, என் கேடகம்En Ratchagaa, en kaedagam

என் கோட்டையும் நீரே;En kottaiyum neerae;

நிறைந்த அருள் பொக்கிஷம்,Niraindha arul pokkisham,

அனைத்தும் நீர்தாமே.Anaiththum neerdhaamae.

சரணம் 5 · Verse 5

மா நேசர், மேய்ப்பர்,Maa Naesar, Maeippar,

பர்த்தாவும்; என் ஜீவனும் நீரே;Parththaavum; en jeevanum neerae;

என் தீர்க்கரும், என் ராஜாவும்En theerkkarum, en raajaavum

ஆசாரியருமே.Aasaariyarumae.

சரணம் 6 · Verse 6

என் நெஞ்சின் ஊக்கம் அற்பந்தான்,En nenjin ookkam arpandhaan,

என் அன்பில் குளிர்ந்தேன்;En anbil kulirndhaen;

உம் முகம் பார்க்கும் போதோ,Um mugam paarkkum podho,

நான் சீராகப் போற்றுவேன்.Naan seeraagap potruvaen.

சரணம் 7 · Verse 7

இம்மையில் ஆயுள் முழுதும்Immaiyil aayul muzhudhum

உம் அன்பைக் கூறுவேன்;Um anbaik kooruvaen;

உம் நாமத்தால் என் சாவிலும் நான்Um naamaththaal en saavilum naan

ஆறித் தேறுவேன்.Aarith thaeruvaen.