Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #110

இரத்தம் காயம் குத்தும் நிறைந்து, நிந்தைக்கே

O Sacred Head Now Wounded · Iraththam kaayam kuththum niraindhu, nindhaikkae

கிறிஸ்துவின் பாடும், மரணமும் · Christ's Sufferings And Death · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

இரத்தம் காயம் குத்தும் நிறைந்து, நிந்தைக்கேIraththam kaayam kuththum niraindhu, nindhaikkae

முள் கிரீடத்தாலே சுற்றும் சூடுண்ட சிரசே,Mul kireedaththaalae sutrum soodunda sirasae,

முன் கன மேன்மை கொண்டMun kana maenmai konda

நீ லச்சை காண்பானேன்?Nee lachai kaanbaanaen?

ஐயோ, வதைந்து நொந்தAiyo, vadhaindhu nondha

உன்முன் பணிகிறேன்.Unmun panigiraen.

சரணம் 2 · Verse 2

நீர் பட்ட வாதை யாவும் என் பாவப் பாரமே;Neer patta vaadhai yaavum en paavap paaramae;

இத்தீங்கும் நோவும் சாவும்Iththeengum novum saavum

என் குற்றம் கர்த்தரேEn kutram Karththarae

இதோ, நான் என்றுஞ்சாகIdho, naan endrunjaaga

நேரஸ்தன் என்கிறேன்;Naerasthan engiraen;

ஆனாலும் நீர் அன்பாகAanaalum neer anbaaga

என்னைக் கண்ணோக்கு மேன்.Ennaik kannokku maen.

சரணம் 3 · Verse 3

நீர் என்னை உமதாடாய் அறியும் மேய்ப்பரே;Neer ennai umadhaadaai ariyum Maeipparae;

முன் ஜீவன் ஊறும் ஆறாய்Mun jeevan oorum aaraai

என் தாகம் தீர்த்தீரே;En thaagam theerththeerae;

நீர் என்னைப் போதிப்பிக்கNeer ennaip podhippikka

அமிர்தம் உண்டேனே;Amirdham undaenae;

நீர் தேற்றரவளிக்க பேரின்ப மாயிற்றே.Neer thaetraravalikka paerinba maayitrae.

சரணம் 4 · Verse 4

உம்மண்டை இங்கே நிற்பேன்,Ummandai ingae nirpaen,

என் மேல் இரங்குமேன்;En mael irangumaen;

விண்ணப்பத்தில் தரிப்பேன்,Vinnappaththil tharippaen,

என் கர்த்தரை விடேன்;En Karththarai vidaen;

இதோ, நான் உம்மைப் பற்றிIdho, naan ummaip patri

கண்ணீர் விட்டண்டினேன்;Kanneer vittandinaen;

மரிக்க உம்மைக் கட்டிMarikka ummaik katti

அணைத்துக் கொள்ளுவேன்.Anaiththuk kolluvaen.

சரணம் 5 · Verse 5

என் ஏழை மனதுக்கு நீர் பாடுபட்டதேEn ezhai manadhukku neer paadupattadhae

மகா சந்தோஷத்துக்கு பலிக்கும், மீட்பரேMahaa sandhoshaththukku balikkum, Meetparae

என் ஜீவனே, நான் கூறEn jeevanae, naan koora

இச்சிலுவையிலேIchiluvaiyilae

உம்மோடென் கண்ணை மூடிUmmoden kannai moodi

மரித்தால் நன்மையே.Mariththaal nanmaiyae.

சரணம் 6 · Verse 6

நான் உம்மைத் தாழ்மையாகNaan ummaith thaazhmaiyaaga

வணங்கி நித்தமேVanangi niththamae

நீர் பட்ட கஸ்திக்காக துதிப்பேன்,இயேசுவே;Neer patta kasthikkaaga thudhippaen,iyaesuvae;

நான் உம்மில் ஊன்றி நிற்கNaan ummil oondri nirka

சகாயராயிரும்;Sagaayaraayirum;

நான் உம்மிலே மரிக்கNaan ummilae marikka

கடாட்சித்தருளும்.Kadaatchiththarulum.

சரணம் 7 · Verse 7

என் மூச்சொடுங்கும் அந்தEn moochodungum andha

கடை இக்கட்டிலும்Kadai ikkattilum

நீர் எனக்காய் இறந்த ரூபாகக் காண்பியும்;Neer enakkaai irandha roopaagak kaanbiyum;

அப்போ நான் உம்மைப் பார்த்துAppo naan ummaip paarththu

கண்ணோக்கி நெஞ்சிலேKannokki nenjilae

அணைத்துக் கொண்டுAnaiththuk kondu

சாய்ந்து தூங்குவேன், இயேசுவே.Saaindhu thoonguvaen, Iyaesuvae.