Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #124

நீர் வாரும் கர்த்தாவே

Neer vaarum Karththaavae

கிறிஸ்துவின் இரண்டாம் வருகை · Second Advent · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

நீர் வாரும் கர்த்தாவே;Neer vaarum Karththaavae;

ராக்காலம் சென்று போம்;Raakkaalam sendru pom;

மா அருணோதயம் காணவேMaa arunodhayam kaanavae

ஆனந்தம் ஆகுவோம்.Aanandham aaguvom.

சரணம் 2 · Verse 2

நீர் வாரும், பக்தர்கள்Neer vaarum, bakthargal

களைத்துச் சோர்கின்றார்;Kalaiththuch sorgindraar;

நல்லாவி மணவாட்டியும்Nallaavi manavaattiyum

நீர் வாரும் என்கிறார்.Neer vaarum engiraar.

சரணம் 3 · Verse 3

நீர் வாரும், சிருஷ்டியும்Neer vaarum, sirushtiyum

தான் படும் துன்பத்தால்Thaan padum thunbaththaal

ஏகோபித் தேங்கி ஆவலாய்த்Egopith thaengi aavalaaith

தவித்து நிற்பதால்.Thaviththu nirpadhaal.

சரணம் 4 · Verse 4

நீர் வாரும், ஆண்டவா;Neer vaarum, Aandavaa;

மாற்றாரைச் சந்திப்பீர்;Maatraaraich sandhippeer;

இருப்புக் கோலால் தண்டித்துக்Iruppuk kolaal thandiththuk

கீழாக்கிப் போடுவீர்.Keezhaakkip poduveer.

சரணம் 5 · Verse 5

நீர் வாரும் ஏசுவே,Neer vaarum Esuvae,

பயிர் முதிர்ந்ததே,Bayir mudhirndhadhae,

உம் அரிவாளை நீட்டுமே,Um arivaalai neettumae,

மா நீதிபரரே.Maa needhipararae.

சரணம் 6 · Verse 6

நீர் வாரும், ராஜாவே;Neer vaarum, raajaavae;

பேர் வாழ்வை நாட்டுவீர்;Paer vaazhvai naattuveer;

பாழான பூமி முற்றிலும்Paazhaana boomi mutrilum

நீர் புதிதாக்குவீர்.Neer pudhidhaakkuveer.

சரணம் 7 · Verse 7

நீர் வாரும், ராஜாவே;Neer vaarum, raajaavae;

பூலோகம் ஆளுவீர்;Boologam aaluveer;

நீங்காத சமாதானத்தின்Neengaadha samaadhaanaththin

செங்கோல் செலுத்துவீர்.Sengol seluththuveer.