Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #137

இம்மானுவேலே வாரும், வாருமே

O Come, O Come, Immanuel · Immaanuvaelae vaarum, vaarumae

கிறிஸ்துவின் இரண்டாம் வருகை · Second Advent · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

இம்மானுவேலே வாரும், வாருமே.Immaanuvaelae vaarum, vaarumae.

மெய் இஸ்ரயேலைச் சிறை மீளுமே;Mei israyaelaich sirai meelumae;

மா தெய்வ மைந்தன் தோன்றும் வரைக்கும்Maa theiva maindhan thondrum varaikkum

உன் ஜனம் பாரில் ஏங்கித் தவிக்கும்.Un janam paaril engith thavikkum.

மகிழ்! மகிழ்! சீயோனின் சபையே,Magizh! Magizh! Seeyonin sapaiyae,

இம்மானுயேலின் நாள் சமீபமே.Immaanuyaelin naal sameepamae.

சரணம் 2 · Verse 2

ஈசாயின் வேர்த் துளிரே வாருமேEesaayin vaerth thulirae vaarumae

பிசாசின் வல்ல கோஷ்டம் நீக்குமேPisaasin valla koshtam neekkumae

பாதாள ஆழம் நின்று இரட்சியும்Paadhaala aazham nindru iratchiyum

வெம் சாவின் மேல் பேர் வெற்றி அளியும்.Vem saavin mael paer vetri aliyum.

சரணம் 3 · Verse 3

அருணோதயமே, ஆ, வாருமே.Arunodhayamae, Aa, vaarumae.

வந்தெங்கள் நெஞ்சை ஆற்றித் தேற்றுமேVandhengal nenjai aatrith thaetrumae

மந்தார ராவின் மேகம் நீக்கிடும்,Mandhaara raavin maegam neekkidum,

இருண்ட சாவின் நிழல் ஓட்டிடும்.Irunda saavin nizhal ottidum.

சரணம் 4 · Verse 4

தாவீதின் திறவு கோலே, வாருமே,Thaaveedhin thiravu kolae, vaarumae,

விண் வாசலைத் திறந்து தாருமே;Vin vaasalaith thirandhu thaarumae;

ஒடுக்கமாம் நல்வழி காத்திடும்,Odukkamaam nalvazhi kaaththidum,

விசாலமாம் தூர்ப்பாதை தூர்த்திடும்.Visaalamaam thoorppaadhai thoorththidum.

சரணம் 5 · Verse 5

மா வல்ல ஆண்டவா, வந்தருளும்;Maa valla Aandavaa, vandharulum;

முற்காலம் சீனாய் மலை மீதிலும்Murkaalam seenaai malai meedhilum

எக்காளம் மின்னலோடு தேவரீர்Ekkaalam minnalodu Devareer

பிரமாணம் இஸ்ரவேலுக்களித்தீர்.Piramaanam isravaelukkaliththeer.