Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #14

பேரன்பர் ஏசு நிற்கிறார்

The Great Physician Now is Near · Paeranbar Esu nirkiraar

தேவனை துதித்தல் · Adoration · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

பேரன்பர் ஏசு நிற்கிறார்,Paeranbar Esu nirkiraar,

நாம் அண்டிக் கொள்ளுவோமேNaam andik kolluvomae

கடாட்சமாகப் பார்க்கிறார்,Kadaatchamaagap paarkkiraar,

நல் நாமம் போற்றுவோமே.Nal naamam potruvomae.

விண்ணில் மேன்மை பெற்றதே;Vinnil maenmai petradhae;

மண்ணோர் இன்பமாகவேMannor inbamaagavae

பாடிப் போற்றும் நாமமே;Paadip potrum naamamae;

ஏசு என்னும் நாமம்.Esu ennum naamam.

சரணம் 2 · Verse 2

உன் பாவம் யாவும் மன்னித்தேன்;Un paavam yaavum manniththaen;

அஞ்சாதே என்கிறாரேAnjaadhae engiraarae

சந்தேகங் கொண்டு சோர்வதேன்?Sandhaegan kondu sorvadhaen?

மெய்ப் பாக்யம் ஈகிறாரே.Meip paakyam eegiraarae.

சரணம் 3 · Verse 3

மா மேன்மை ஏசு ஸ்வாமிக்கேMaa maenmai Esu swaamikkae

நம்மால் உண்டாவதாகNammaal undaavadhaaga

ரட்சண்ய க்ரியைக்காகவேRatchanya kriyaikkaagavae

நாம் வாழ்த்தல் செய்வோமாக.Naam vaazhththal seivomaaga.

சரணம் 4 · Verse 4

ரட்சண்ய வல்ல நாமத்தால்Ratchanya valla naamaththaal

விசாரம் நீங்கிப் போகும்;Visaaram neengip pogum;

அவ்வின்ப நாமம் கேட்பதால்Avvinba naamam kaetpadhaal

சந்தோஷமும் உண்டாகும்.Sandhoshamum undaagum.

சரணம் 5 · Verse 5

பேரின்ப மோட்ச லோகத்தில்Paerinba motcha logaththil

மாண்பாகக் கூடுவோமே,Maanbaagak kooduvomae,

ரட்சண்யநாதர் பாதத்தில்Ratchanyanaadhar paadhaththil

சாஷ்டாங்கம் பண்ணுவோமே.Saashtaangam pannuvomae.