Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #146

ஆயத்தமா, இதோ ஆயத்தமா

Aayaththamaa, idho aayaththamaa

கிறிஸ்துவின் இரண்டாம் வருகை · Second Advent · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

ஆயத்தமா, இதோ ஆயத்தமா?Aayaththamaa, idho aayaththamaa?

கர்த்தர் வருகிறார் ஆயத்தமா?Karththar varugiraar aayaththamaa?

சரணம் 1 · Verse 1

நடுராத்திரியின் சத்தம் நம் காதினில்Naduraaththiriyin saththam nam kaadhinil

தொனிக்கவில்லையோ?Thonikkavillaiyo?

தாமத மேன் பின்னும் – ஆயத்தமாThaamadha maen pinnum – aayaththamaa

சரணம் 2 · Verse 2

கால மிது கடைக் கால மிது;Kaala midhu kadaik kaala midhu;

கர்த்தர் வருகைக்குக் காலமிது;Karththar varugaikkuk kaalamidhu;

அடையாளம் இதோ, அனந்தம் காணுது,Adaiyaalam idho, anandham kaanudhu,

காலம் சமீபித்த தென்றறிந்த போது.Kaalam sameepiththa thendrarindha podhu.

– ஆயத்தமா– Aayaththamaa

பல்லவி · Chorus

ஆயத்தமா, இதோ ஆயத்தமா?Aayaththamaa, idho aayaththamaa?

கர்த்தர் வருகிறார் ஆயத்தமா?Karththar varugiraar aayaththamaa?

சரணம் 3 · Verse 3

காலம் இதில் மணவாளன் கர்த்தர்Kaalam idhil manavaalan Karththar

நினையாத நேரம் வந்திடுவார்.Ninaiyaadha naeram vandhiduvaar.

மரித்த விசுவாசிகள் எழும்புவார்;Mariththa visuvaasigal ezhumbuvaar;

ஜீவனுள்ளோரும் மறு ரூப மாகுவார்.Jeevanullorum maru roopa maaguvaar.

– ஆயத்தமா– Aayaththamaa

பல்லவி · Chorus

ஆயத்தமா, இதோ ஆயத்தமா?Aayaththamaa, idho aayaththamaa?

கர்த்தர் வருகிறார் ஆயத்தமா?Karththar varugiraar aayaththamaa?

சரணம் 4 · Verse 4

மேகங்கள் மேல் சென்று ஆகாயத்தில்Maegangal mael sendru aagaayaththil

சந்திப்போம் கர்த்தரை முகமுகமாய்;Sandhippom Karththarai mugamugamaai;

பலனளிப்பாரே ஏசு மகாராஜாPalanalippaarae Esu magaaraajaa

சரீரத்தில் செய்த செய்கைக்குத் தக்கதாய்Sareeraththil seidha seigaikkuth thakkadhaai

– ஆயத்தமா– Aayaththamaa

பல்லவி · Chorus

ஆயத்தமா, இதோ ஆயத்தமா?Aayaththamaa, idho aayaththamaa?

கர்த்தர் வருகிறார் ஆயத்தமா?Karththar varugiraar aayaththamaa?

சரணம் 5 · Verse 5

ராஜரீகம் பெற்று மகிமையாய்Raajareegam petru magimaiyaai

ராஜா எழுந்தருள் வார் வானத்தில்;Raajaa ezhundharul vaar vaanaththil;

ஏசு ராஜாவுடன் சிங்காசனத்தில் நாம்Esu raajaavudan singaasanaththil naam

ஆளுவோம் பரத்தில் ஆயிரம் வருஷம்.Aaluvom paraththil aayiram varusham.

– ஆயத்தமா– Aayaththamaa

பல்லவி · Chorus

ஆயத்தமா, இதோ ஆயத்தமா?Aayaththamaa, idho aayaththamaa?

கர்த்தர் வருகிறார் ஆயத்தமா?Karththar varugiraar aayaththamaa?

சரணம் 6 · Verse 6

நியாயத் தீர்ப்பிருக்கும் முடிவினில்Niyaayath theerppirukkum mudivinil

வெள்ளை சிங்காசன நியாயத் தீர்ப்பு,Vellai singaasana niyaayath theerppu,

மாறிப் போகுமே, இவ்வானமும் பூமியும்,Maarip pogumae, ivvaanamum boomiyum,

தோன்றுமே, புதிய வானமும் பூமியும்.Thondrumae, pudhiya vaanamum boomiyum.

– ஆயத்தமா– Aayaththamaa

பல்லவி · Chorus

ஆயத்தமா, இதோ ஆயத்தமா?Aayaththamaa, idho aayaththamaa?

கர்த்தர் வருகிறார் ஆயத்தமா?Karththar varugiraar aayaththamaa?