Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #155

மேலோக இன்ப நாட்டில் நித்ய வீடுண்டே

There is a Home Eternal · Maeloga inba naattil nithya veedundae

மோட்சம் · Heaven · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

மேலோக இன்ப நாட்டில் நித்ய வீடுண்டே;Maeloga inba naattil nithya veedundae;

சாவில்லா அவ்வீட்டில் ஓயாத வாழ்வுண்டே.Saavillaa avveettil oyaadha vaazhvundae.

தூய அங்கி தரித்து,Thooya angi thariththu,

தூதர் சாஷ்டாங்கம் செய்வார்.Thoodhar saashtaangam seivaar.

ஜோதி வீசும் அவ்வீட்டைJothi veesum avveettai

என்று பார்த் தானந்திப்பேன்?Endru paarth thaanandhippaen?

ஆ! ஆனந்தமாம் பேரின்பம் உண்டாம்,Aa! Aanandhamaam paerinbam undaam,

நல் மீட்பரின் வீட்டில், பேரின்பம் உண்டாம்.Nal Meetparin veettil, paerinbam undaam.

சரணம் 2 · Verse 2

இலங்கும் அந்த வீட்டில் பாலர் பாடுவார்;Ilangum andha veettil paalar paaduvaar;

தேவ ஆசனத்தில் மீட்பர் வீற்றாளுவார்:Deva aasanaththil Meetpar veetraaluvaar:

பாலர் கீதங்கள் பாடிPaalar geethangal paadi

ஓய்வின்றி ஆர்ப்பரிப்பார்;Oivindri aarpparippaar;

ஜோதி வீசும் அவ்வீட்டைJothi veesum avveettai

என்று பார்த் தானந்திப்பேன்?Endru paarth thaanandhippaen?

சரணம் 3 · Verse 3

சீக்கிரம் மோட்ச நகர் யாவரும் சேருவார்.Seekkiram motcha nagar yaavarum saeruvaar.

ஏசு என்றன் மீட்பர் சாவில் நான் அஞ்சிடேன்Esu endran Meetpar saavil naan anjidaen

தூய நேசரைக் காண்பேன்Thooya Naesaraik kaanbaen

தங்கச் சிம்மாசனத்தில்;Thangach simmaasanaththil;

ஜோதி வீசும் அவ்வீட்டைJothi veesum avveettai

என்றும் பார்த் தானந்திப்பேன்.Endrum paarth thaanandhippaen.