Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #173

அறையப் பட்ட ஏசு உன் மீட்பர் பார்ப்பாய்

There is Life for a Look · Araiyap patta Esu un Meetpar paarppaai

இரட்சண்ய வழி · Salvation · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

அறையப் பட்ட ஏசு உன் மீட்பர் பார்ப்பாய்;Araiyap patta Esu un Meetpar paarppaai;

ஜீவன் இச்சணமே அளிப்பார்Jeevan ichanamae alippaar

ஓ! பார், பாவி, பார், நீ மீட்கப் படுவாய்O! Paar, paavi, paar, nee meetkap paduvaai

சிலுவை அறையுண்டவரால்.Siluvai araiyundavaraal.

பார், பார், ஜீவிப்பாய்Paar, paar, jeevippaai

சிலுவையில் கிறிஸ்துவைப்Siluvaiyil Kiristhuvaip

பார்த்து ஜீவிப்பாய்,Paarththu jeevippaai,

உனக்கே ஜீவன் இச்சணமே.Unakkae jeevan ichanamae.

சரணம் 2 · Verse 2

அங்கேன் தொங்கினார் பாவம் சுமந்தோராய்?Angaen thonginaar paavam sumandhoraai?

மானிடர் குற்றந் தீர்க்கத் தானே?Maanidar kutran theerkkath thaanae?

பக்கத்தில் ரத்தம் பாய்ந்து வடிந்த தாறாய்,Pakkaththil raththam paaindhu vadindha thaaraai,

பாவந் தீர்ந்தது சாவால் தானே.Paavan theerndhadhu saavaal thaanae.

சரணம் 3 · Verse 3

செய்ய வேண்டிய தெல்லாம் இதோ முடித்தார்;Seiya vaendiya thellaam idho mudiththaar;

சந்தேகம் இனி அடைவதேன்?Sandhaegam ini adaivadhaen?

முடிவாம் காலத்தில் ஓர் முறைவருவார்,Mudivaam kaalaththil or muraivaruvaar,

ரட்சிப்பை நிறைவேற்றிடவே.Ratchippai niraivaetridavae.