Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #175

விலையேறப் பெற்ற ரத்தமே

Vilaiyaerap petra raththamae

இரட்சண்ய வழி · Salvation · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

விலையேறப் பெற்ற ரத்தமே,Vilaiyaerap petra raththamae,

சிலுவையில் கண்டேன்;Siluvaiyil kandaen;

அதினால் என் மன்னிப்பாயிற்றே,Adhinaal en mannippaayitrae,

என்றெண்ணி நம்பினேன்.Endrenni nambinaen.

ரத்தம்! திவ்விய ரத்தமே!Raththam! Dhivviya raththamae!

ஏசு சிந்தினாரே!Esu sindhinaarae!

சிலுவையில் பாடு பட்டோராய்Siluvaiyil paadu pattoraai

மாண்டாரே எனக்காய்.Maandaarae enakkaai.

சரணம் 2 · Verse 2

லட்சாதி லட்சம் நன்மையேLatchaadhi latcham nanmaiyae

தேவன்பினா லுண்டாம்Devanbinaa lundaam

எல்லாவற்றிலும் சிறந்ததே,Ellaavatrilum sirandhadhae,

என் ஏசு ரத்தமாம்.En Esu raththamaam.

சரணம் 3 · Verse 3

திரளான பாவஞ் செய்த நான்Thiralaana paavanj seidha naan

பிசாசின் அடிமை.Pisaasin adimai.

திரு ரத்தத்தால் என் ஏசுதான்Thiru raththaththaal en Esudhaan

மீட்டுக் கொண்டார் என்னை.Meettuk kondaar ennai.

சரணம் 4 · Verse 4

பெரு வெள்ளம் போன்ற ரத்தமேPeru vellam pondra raththamae

என் பாவம் நீக்கிற்று.En paavam neekkitru.

கருத்தாய்க் கண்டேனே நித்தமேKaruththaaik kandaenae niththamae

துதி உண்டாயிற்று.Thudhi undaayitru.

சரணம் 5 · Verse 5

சீயோன் உச்சியில் இப்பாட்டையேSeeyon uchiyil ippaattaiyae

என்றைக்கும் பாடுவோம்.Endraikkum paaduvom.

சந்நிதானத்தில் கெம்பீரமாய்Sannidhaanaththil gembeeramaai

ரத்தத்தைப் போற்றுவோம்.Raththaththaip potruvom.