Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #186

சிலுவை நிழலில் அனுதினம் அடியான்

Siluvai nizhalil anudhinam adiyaan

இரட்சண்ய வழி · Salvation · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

சிலுவை நிழலில் அனுதினம் அடியான்Siluvai nizhalil anudhinam adiyaan

சாய்ந் திளைப்பாறிடுவேன் – ஆ! ஆ!Saain thilaippaariduvaen – Aa! Aa!

சரணம் 1 · Verse 1

சிலுவையின் அன்பின் மறைவில்Siluvaiyin anbin maraivil

கிருபையின் இனிய நிழலில்Kirupaiyin iniya nizhalil

ஆத்தும நேசரின் அருகில்Aaththuma Naesarin arugil

அடைகிறேன் ஆறுதல் மனதில்– சிலுவைAdaigiraen aarudhal manadhil– siluvai

சரணம் 2 · Verse 2

பாவப் பார சுமையதால் சோர்ந்தேPaavap paara sumaiyadhaal sorndhae

தளர்ந்த என் ஜீவியமே – ஆ! ஆ!Thalarndha en jeeviyamae – Aa! Aa!

சிலுவை யண்டை வந்ததினால்Siluvai yandai vandhadhinaal

சிறந்த சந்தோஷம் கண்டதினால்Sirandha sandhosham kandadhinaal

இளைப்படையாது மேலோகம்Ilaippadaiyaadhu maelogam

ஏகுவேன் பறந்தே வேகம் – சிலுவைEguvaen parandhae vaegam – siluvai

பல்லவி · Chorus

சிலுவை நிழலில் அனுதினம் அடியான்Siluvai nizhalil anudhinam adiyaan

சாய்ந் திளைப்பாறிடுவேன் – ஆ! ஆ!Saain thilaippaariduvaen – Aa! Aa!

சரணம் 3 · Verse 3

இன்பம் சுரந்திடும் திரு மொழி கேட்டு என்Inbam surandhidum thiru mozhi kaettu en

இன்னல்கள் மறந்திடுவேன் – ஆ! ஆ!Innalgal marandhiduvaen – Aa! Aa!

திருமறை இன்னிசை நாதம்Thirumarai innisai naatham

தேனிலு மினிய வேதம்Thaenilu miniya vaedham

தருமெனக் கனந்த சந்தோஷம்Tharumenak kanandha sandhosham

தீர்க்கு மென் இதயத்தின் தோஷம்–சிலுவைTheerkku men idhayaththin thosham–siluvai

பல்லவி · Chorus

சிலுவை நிழலில் அனுதினம் அடியான்Siluvai nizhalil anudhinam adiyaan

சாய்ந் திளைப்பாறிடுவேன் – ஆ! ஆ!Saain thilaippaariduvaen – Aa! Aa!

சரணம் 4 · Verse 4

எவ்வித கொடிய இடருக்கு மஞ்சேன்Evvidha kodiya idarukku manjaen

ஏசுவைச் சார்ந்து நிற்பேன் – ஆ! ஆ!Esuvaich saarndhu nirpaen – Aa! Aa!

அவனியில் வியாகுலம் வந்தால்Avaniyil viyaagulam vandhaal

அவரையே நான் அண்டிக் கொண்டால்Avaraiyae naan andik kondaal

அலை மிக மோதிடு மந்நாள்Alai miga modhidu mannaal

ஆறுதல் அளிப்பாரே சொன்னால்– சிலுவைAarudhal alippaarae sonnaal– siluvai

பல்லவி · Chorus

சிலுவை நிழலில் அனுதினம் அடியான்Siluvai nizhalil anudhinam adiyaan

சாய்ந் திளைப்பாறிடுவேன் – ஆ! ஆ!Saain thilaippaariduvaen – Aa! Aa!