Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #187

ஏசு நாமம் ஒன்றை நம்புவீர்

Esu naamam ondrai nambuveer

இரட்சண்ய வழி · Salvation · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

ஏசு நாமம் ஒன்றை நம்புவீர்Esu naamam ondrai nambuveer

பூலோகத்தாரே – ஏசுBoologaththaarae – Esu

சரணம் 1 · Verse 1

ஏசு நாமம் ஒன்றை நம்பும்Esu naamam ondrai nambum

ரட்சண்யத்துக் கிதுவே ஸ்தம்பம்Ratchanyaththuk kidhuvae sthambam

பேசும் வேறே நாம மெல்லாம் பேயின்Paesum vaerae naama mellaam paeyin

வம்பும் தும்புமாகும் – ஏசுVambum thumbumaagum – Esu

பல்லவி · Chorus

ஏசு நாமம் ஒன்றை நம்புவீர்Esu naamam ondrai nambuveer

பூலோகத்தாரே – ஏசுBoologaththaarae – Esu

சரணம் 2 · Verse 2

பார்த்திபன் தாவீது குலக்Paarththipan thaaveedhu kulak

கோத்திரக் கன்னிமரி பால்Koththirak kannimari paal

நேத்திரம் போலேNaeththiram polae

உதித்துத் தாத்திரி ரெட்சகனான – ஏசுUdhiththuth thaaththiri retchaganaana – Esu

பல்லவி · Chorus

ஏசு நாமம் ஒன்றை நம்புவீர்Esu naamam ondrai nambuveer

பூலோகத்தாரே – ஏசுBoologaththaarae – Esu

சரணம் 3 · Verse 3

பூதலத் தஞ்ஞான இருள்Poodhalath thagngnaana irul

போக்கவே மெய்ஞ் ஞான பெரும்Pokkavae meinj gnaana perum

ஜோதியாய் விளங்கி நிற்கும்Jothiyaai vilangi nirkum

நீதியின் சூரியன் ஆன – ஏசுNeedhiyin sooriyan aana – Esu

பல்லவி · Chorus

ஏசு நாமம் ஒன்றை நம்புவீர்Esu naamam ondrai nambuveer

பூலோகத்தாரே – ஏசுBoologaththaarae – Esu

சரணம் 4 · Verse 4

பாவி களீடேறPaavi kaleedaera

மோட்ச பாக்கியம் பெறுவதற்காய்Motcha baakkiyam peruvadharkaai

ஜீவன் விட் டுயிர்த் தெழுந்துJeevan vit tuyirth thezhundhu

சேணுலகுக் கேறிச் சென்ற – ஏசுSaenulaguk kaerich sendra – Esu

பல்லவி · Chorus

ஏசு நாமம் ஒன்றை நம்புவீர்Esu naamam ondrai nambuveer

பூலோகத்தாரே – ஏசுBoologaththaarae – Esu

சரணம் 5 · Verse 5

விண்டலத் தவர்கள் சூழVindalath thavargal soozha

கண்டலகை பதறி விழKandalagai padhari vizha

மண்டலத்தைத் தீர்வைMandalaththaith theervai

செய்யக் கொண்டல் மிசை வரும்Seiyak kondal misai varum

ராஜன் – ஏசுRaajan – Esu

பல்லவி · Chorus

ஏசு நாமம் ஒன்றை நம்புவீர்Esu naamam ondrai nambuveer

பூலோகத்தாரே – ஏசுBoologaththaarae – Esu