Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #201

தட்டித் தட்டி நிற்கிறார்

Knocking Knocking · Thattith thatti nirkiraar

பாவிக்கு அழைப்பு · Invitation To Sinners · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

தட்டித் தட்டி நிற்கிறார்,Thattith thatti nirkiraar,

காத்துக் கொண்டிருக்கிறார்;Kaaththuk kondirukkiraar;

பரதேசி போல வந்தும்Paradhaesi pola vandhum

ராஜனாய் விளங்குகிறார்.Raajanaai vilangugiraar.

மனமே இவ் வன்புணர்ந்துManamae iv vanbunarndhu

கதவைத் திறக்கப் பார்.Kadhavaith thirakkap paar.

சரணம் 2 · Verse 2

தட்டித் தட்டி நிற்கிறார்,Thattith thatti nirkiraar,

காத்துக் கொண்டிருக்கிறார்,Kaaththuk kondirukkiraar,

நிலையோரம் புல் முளைத்து;Nilaiyoram pul mulaiththu;

கீலும் துருப்பட்டதுKeelum thuruppattadhu

கதவசையாமல் தங்கிKadhavasaiyaamal thangi

திறவாமற் போயிற்று.Thiravaamar poyitru.

சரணம் 3 · Verse 3

தட்டித் தட்டி நிற்கிறார்,Thattith thatti nirkiraar,

காத்துக் கொண்டிருக்கிறார்;Kaaththuk kondirukkiraar;

சூட்டப்பட்ட சிரசுள்ளார்Soottappatta sirasullaar

காயப்பட்ட கைகள் பார்.Kaayappatta kaigal paar.

நேசப் பார்வையுற்ற மீட்பர்Naesap paarvaiyutra Meetpar

இன்னும் காத்து நிற்கிறார்.Innum kaaththu nirkiraar.

சரணம் 4 · Verse 4

உள்ளே வாரும்! ஏசுவே,Ullae vaarum! Esuvae,

என்றன் நெஞ்சில் தங்குமே;Endran nenjil thangumae;

திவ்ய அன்பை உணராமல்,Dhivya anbai unaraamal,

முன்னே வாசல் பூட்டினேன்.Munnae vaasal poottinaen.

இப்போதே! என் நேச நாதா!Ippodhae! En naesa Naathaa!

உள்ளே வாரும்! வாருமே.Ullae vaarum! Vaarumae.