Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #208

பாவி, இன்றே திரும்பாயோ

Paavi, indrae thirumbaayo

பாவிக்கு அழைப்பு · Invitation To Sinners · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

பாவி, இன்றே திரும்பாயோ? – நேசPaavi, indrae thirumbaayo? – Naesa

ஆவியின் சத்தங் கேளாயோ?Aaviyin saththan kaelaayo?

சரணம் 1 · Verse 1

மேவி தயை நிரம்பி,Maevi dhayai nirambi,

ஏவி உனை விரும்பிக்Evi unai virumbik

கூவி அழைக்கையிலேKoovi azhaikkaiyilae

தாவி ஏசுவை நோக்கி – பாவிThaavi Esuvai nokki – paavi

சரணம் 2 · Verse 2

பாவம் தொடர்ந்து செல்லுமே; தேவPaavam thodarndhu sellumae; Deva

கோபம் அடர்ந்து கொல்லுமே; – உனின்பKopam adarndhu kollumae; – uninba

லாபம் எல்லாமே சாபம்; கால மிதுவே காலம்;Laapam ellaamae saapam; kaala midhuvae kaalam;

தாபம் உள உன் அன்பரின்Thaapam ula un anbarin

பரிதாபம் உண்டு. – பாவிParidhaapam undu. – Paavi

பல்லவி · Chorus

பாவி, இன்றே திரும்பாயோ? – நேசPaavi, indrae thirumbaayo? – Naesa

ஆவியின் சத்தங் கேளாயோ?Aaviyin saththan kaelaayo?

சரணம் 3 · Verse 3

எத்தனை போதனை பெற்றாய்? – ஐயையோ!Eththanai podhanai petraai? – Aiyaiyo!

சுத்தமாய் சாதனை அற்றாய் – என்றாலும்Suththamaai saadhanai atraai – endraalum

அத்தனை பாவத்தையும் உத்தமமாய் வெறுத்து,Aththanai paavaththaiyum uththamamaai veruththu,

அத்தனே, தத்தம் செய்தேன்,Aththanae, thaththam seidhaen,

நித்தமும் காருமென்று – பாவிNiththamum kaarumendru – paavi

பல்லவி · Chorus

பாவி, இன்றே திரும்பாயோ? – நேசPaavi, indrae thirumbaayo? – Naesa

ஆவியின் சத்தங் கேளாயோ?Aaviyin saththan kaelaayo?

சரணம் 4 · Verse 4

கல்வாரியில் தொங்கினோர் யார்? – உனக்Kalvaariyil thonginor yaar? – Unak

கல்லோ நேசர் ஏங்கினர் பார் – இன்னும்Kallo Naesar enginar paar – innum

பொல்லா மனதுடனே கல்போல் கடினமாகிPollaa manadhudanae kalbol kadinamaagi

சொல்வோரையும் நிந்தித்துSolvoraiyum nindhiththu

எல்லாக் கேட்டுக்குள்ளான – பாவிEllaak kaettukkullaana – paavi

பல்லவி · Chorus

பாவி, இன்றே திரும்பாயோ? – நேசPaavi, indrae thirumbaayo? – Naesa

ஆவியின் சத்தங் கேளாயோ?Aaviyin saththan kaelaayo?

சரணம் 5 · Verse 5

நிலையற்றலை கின்றாரே – இரத்தNilaiyatralai kindraarae – iraththa

விலை மதியாமல் சென்றாரே; – போதும்Vilai madhiyaamal sendraarae; – podhum

மலையாமல் ஏசுவிடம்Malaiyaamal Esuvidam

தொலையாத கவலை சொல்லிTholaiyaadha kavalai solli

கலையான வேதம் கற்றுKalaiyaana vaedham katru

நிலையான ரட்சை பெற; – பாவிNilaiyaana ratchai pera; – paavi

பல்லவி · Chorus

பாவி, இன்றே திரும்பாயோ? – நேசPaavi, indrae thirumbaayo? – Naesa

ஆவியின் சத்தங் கேளாயோ?Aaviyin saththan kaelaayo?