Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #212

நம்ப வேண்டாம் நம்ப வேண்டாம்

Namba vaendaam namba vaendaam

பாவிக்கு அழைப்பு · Invitation To Sinners · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

நம்ப வேண்டாம் நம்ப வேண்டாம் – இந்தப்Namba vaendaam namba vaendaam – indhap

பொய்யுலகை நம்ப வேண்டாம்.Poiyulagai namba vaendaam.

நேசங் காட்டித் துரோகஞ் செய்யும் – இந்தப்Naesan kaattith thuroganj seiyum – indhap

பாழுலகை நம்ப வேண்டாம்.Paazhulagai namba vaendaam.

சரணம் 2 · Verse 2

உன்னைப் பெற்ற மாதா வெங்கே?Unnaip petra maadhaa vengae?

போஷித்த உன் தந்தை எங்கே?Poshiththa un thandhai engae?

போய் விட்டாரோ, போய் விட்டாரோ?Poi vittaaro, poi vittaaro?

உன்னை விட்டுப் போய் விட்டாரோ?Unnai vittup poi vittaaro?

சரணம் 3 · Verse 3

அண்ணன் எங்கே தம்பி எங்கே?Annan engae thambi engae?

அக்காள் எங்கே தங்கை எங்கே?Akkaal engae thangai engae?

ஆசையாகத் தேடி வைத்தAasaiyaagath thaedi vaiththa

ஆஸ்தி செல்வம் தானு மெங்கே?Aasthi selvam thaanu mengae?

சரணம் 4 · Verse 4

திருடனைப் போற் சாவு வரும்Thirudanaip por saavu varum

திடுக்கிடுவாய் நீயுமப்போ,Thidukkiduvaai neeyumappo,

பாம்பின் வாயிற்றவளை போலPaambin vaayitravalai pola

பரிதபிப்பாய், பரிதபிப்பாய்.Paridhapippaai, paridhapippaai.

சரணம் 5 · Verse 5

பிரேதமாகப் பாவி யுன்னைத்Piraedhamaagap paavi yunnaith

தூக்கிப் போவார் கல்லறைக்குThookkip povaar kallaraikku

அங்கே யுன்னைப் புதைத்திடுவார்;Angae yunnaip pudhaiththiduvaar;

நம்புவாயோ உலகைப் பின்னும்?Nambuvaayo ulagaip pinnum?

சரணம் 6 · Verse 6

ஏசு நாதர் பாதந் தேடும்,Esu Naathar paadhan thaedum,

மீட்பை இன்றே பெற்றுக் கொள்ளும்,Meetpai indrae petruk kollum,

குருசிற் றெங்கும் நேசர் பாரும்,Kurusir rengum Naesar paarum,

குணமாக்குவார் இப்போ வாரும்.Kunamaakkuvaar ippo vaarum.