Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #220

ரட்சா பெருமானே பாரும்

Saviour Like a Shepherd, Lead Us · Ratchaa perumaanae paarum

மனந்திரும்புதலும் ஏற்றுக்கொள்ளப்படுதலும் · Repentance And Acceptance · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

ரட்சா பெருமானே பாரும்Ratchaa perumaanae paarum

புண்ய பாதம் அண்டினோம்.Punya paadham andinom.

சுத்தமாக்கிச் சீரைத் தாரும்Suththamaakkich seeraith thaarum

தேடி வந்து நிற்கிறோம்.Thaedi vandhu nirkirom.

ஏசு நாதா! ஏசு நாதா!Esu Naathaa! Esu Naathaa!

உன்றன் சொந்த மாயினோம் (2)Undran sondha maayinom (2)

சரணம் 2 · Verse 2

மேய்ப்பன் போல முந்திச் சென்றும்Maeippan pola mundhich sendrum

பாது காத்தும் வருவீர்Paadhu kaaththum varuveer

ஜீவத் தண்ணீரண்டை என்றும்Jeevath thanneerandai endrum

இளைப்பாறச் செய்கிறீர்Ilaippaarach seigireer

இயேசு நாதா! ஏசு நாதா!Yesu Naathaa! Esu Naathaa!

நித்தம் போஷிப்பிக்கிறீர் (2)Niththam poshippikkireer (2)

சரணம் 3 · Verse 3

நீதி பாதை தவறாமல்Needhi paadhai thavaraamal

சுகமாகக் காக்கிறீர்!Sugamaagak kaakkireer!

மோசம் பயமுமில்லாமல்Mosam bayamumillaamal

தங்கச் செய்து தாங்குவீர்Thangach seidhu thaanguveer

ஏசு நாதா! ஏசு நாதா!Esu Naathaa! Esu Naathaa!

ஒரு போதும் கைவிடீர் (2)Oru podhum kaivideer (2)

சரணம் 4 · Verse 4

ஜீவக்கால பரியந்தம்Jeevakkaala pariyandham

மேய்த்தும் காத்து வருவீர்Maeiththum kaaththu varuveer

பின்பு திவ்ய பேரானந்தம்Pinbu dhivya paeraanandham

தந்து வாழச் செய்குவீர்Thandhu vaazhach seiguveer

ஏசு நாதா! ஏசு நாதா!Esu Naathaa! Esu Naathaa!

ஊழி காலம் வாழ்விப்பீர் (2)Oozhi kaalam vaazhvippeer (2)