Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #237

தெய்வன்பு தான் மா இனிமை

O Love Divine How Sweet · Theivanbu thaan maa inimai

அன்பு · Love · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

தெய்வன்பு தான் மா இனிமை,Theivanbu thaan maa inimai,

அதற்கென் முழு மனதைக்Adharken muzhu manadhaik

கொடுத்திருக்கிறேன்;Koduththirukkiraen;

என் மீட்பர் அன்பின் அளவைEn Meetpar anbin alavai

அறிவதே என் மகிமை;Arivadhae en magimai;

நான் அறியாததேன்?Naan ariyaadhadhaen?

சரணம் 2 · Verse 2

பாதாளஞ் சாவைப் பார்க்கிலும்Paadhaalanj saavaip paarkkilum

அவரின் நேசம் பலமும்Avarin naesam palamum

ஆழமுமானதே; அது பூலோகத்தாருக்கும்,Aazhamumaanadhae; adhu boologaththaarukkum,

ஞானமுள்ள வானோருக்கும்,Gnaanamulla vaanorukkum,

எட்டாத தாயிற்றே.Ettaadha thaayitrae.

சரணம் 3 · Verse 3

தேவன்பை நீர் பாராட்டுவீர்,Devanbai neer paaraattuveer,

என்மேல் இரங்கித் தேவரீர்Enmael irangith Devareer

அவ்வன்பை ஊற்றிடும்;Avvanbai ootridum;

என்னை உம் தூய ஆவியால்Ennai um thooya aaviyaal

நான் கெஞ்சிக் கேட்கும் அன்பினால்Naan kenjik kaetkum anbinaal

நிரப்பியருளும்.Nirappiyarulum.

சரணம் 4 · Verse 4

உம் திருமுகம் பார்ப்பதும்,Um thirumugam paarppadhum,

உம்மண்டை நித்தஞ் சேர்வதும்,Ummandai niththanj saervadhum,

என் முழு வாஞ்சையாம்;En muzhu vaanjaiyaam;

உம் திவ்விய சத்தம் கேட்பதுUm dhivviya saththam kaetpadhu

எனக்கு இன்பம் களிப்பு,Enakku inbam kalippu,

என் நித்திய பாக்யமாம்.En niththiya paakyamaam.