Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #256

என் பாவந் தீர்ந்த நாளையே

O Happy Day, That Fixed Choice · En paavan theerndha naalaiyae

சாட்சியும், சந்தோஷமும் · Testimony And Joy · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

என் பாவந் தீர்ந்த நாளையேEn paavan theerndha naalaiyae

அன்போடு எண்ணி ஜீவிப்பேன்Anbodu enni jeevippaen

அந்நாளில் பெற்ற ஈவையேAnnaalil petra eevaiyae

சந்தோஷமாய்க் கொண்டாடுவேன்.Sandhoshamaaik kondaaduvaen.

இன்ப நாள்! இன்ப நாள்!Inba naal! Inba naal!

என் பாவம் தீர்ந்து போன நாள்!En paavam theerndhu pona naal!

பேரன்பர் என்னை ரட்சித்தார்Paeranbar ennai ratchiththaar

சீராக்கி இன்பம் நல்கினார்.Seeraakki inbam nalginaar.

சரணம் 2 · Verse 2

இம்மானுவேல் இப்பாவியைImmaanuvael ippaaviyai

தம் சொந்தமாக்கிக் கொண்டனர்;Tham sondhamaakkik kondanar;

சந்தேகம் நீக்கி மன்னிப்பைSandhaegam neekki mannippai

தந்தென்னை அன்பாய்ச் சேர்த்தனர்.Thandhennai anbaaich saerththanar.

சரணம் 3 · Verse 3

என் உள்ளமே, உன் மீட்பரைEn ullamae, un Meetparai

என்றைக்கும் சார்ந்து வாழுவாய்;Endraikkum saarndhu vaazhuvaai;

ஆருயிர் தந்த நாதரைAaruyir thandha Naatharai

ஓர்காலும் விட்டு நீங்கிடாய்.Orgaalum vittu neengidaai.

சரணம் 4 · Verse 4

ஆட்கொண்ட நாதா! என்றனைAatkonda Naathaa! Endranai

நாடோறும் தத்தஞ் செய்குவேன்;Naadorum thaththanj seiguvaen;

பின் மோட்ச வீட்டில் பேரன்பைPin motcha veettil paeranbai

இன்னோசையாலே பாடுவேன்.Innosaiyaalae paaduvaen.