சத்தாய் நிஷ்களமாய்Saththaai nishkalamaai
ஒரு சாமியமும் இலதாய்ச்Oru saamiyamum iladhaaich
சித்தாய் ஆனந்தமாய்த்Siththaai aanandhamaaith
திகழ்கின்ற திரித்துவமே,Thigazhgindra thiriththuvamae,
எத்தாலே யடியேன்Eththaalae yadiyaen
கடைத் தேறுவன் என் பாவந் தீர்Kadaith thaeruvan en paavan theer
அத்தா உன்னை யல்லால்Aththaa unnai yallaal
எனக்கார் துணை? யாருறவே?Enakkaar thunai? Yaaruravae?
எம்மா விக்குருகிEmmaa vikkurugi
உயிரீந்து புரந்ததற்கோர்Uyireendhu purandhadharkor
கைம்மா றுண்டுகொலோ?Kaimmaa rundugolo?
கடைகாறுமே கையடையாய்ச்Kadaigaarumae kaiyadaiyaaich
சும்மா ரக்ஷ்ணைசெய்,Summaa rakshnaisei,
சொல் சுதந்திரம் யாதுமிலேன்,Sol sudhandhiram yaadhumilaen,
அம்மான் – உன்னையல்லால்Ammaan – unnaiyallaal
எனக்கார் துணை? யாருறவே?Enakkaar thunai? Yaaruravae?
திரைசேர் வெம்பவமாம்Thiraisaer vembavamaam
கடல் மூழ்கிய தீயரெமைக்Kadal moozhgiya theeyaremaik
கரைசேர்த் துய்க்கவென்றேKaraisaerth thuikkavendrae
புணையாயினை கண்ணிலியான்Punaiyaayinai kanniliyaan
பரசேன் பற்றுகிலேன்Parasaen patrugilaen
என்னைப் பற்றிய பற்றுவிடாய்,Ennaip patriya patruvidaai,
அரசே, உன்னை – யல்லால்Arasae, unnai – yallaal
எனக்கார் துணை? யாருறவே?Enakkaar thunai? Yaaruravae?
தாயே, தந்தை தமர்,Thaayae, thandhai thamar,
குரு சம்பத்து நட்பெவையும்Kuru sambaththu natpevaiyum
நீயே எம்பெருமான்,Neeyae emberumaan,
கதி வேறில்லை நிண்ணயங் காண்:Kadhi vaerillai ninnayan kaan:
ஏயே, என்றிகழும்Eyae, endrigazhum
உலகோடெனக் கென்னுரிமை?Ulagodenak kennurimai?
ஆயே, உன்னையல்லால்Aayae, unnaiyallaal
எனக்கார் துணை? யாருறவே?Enakkaar thunai? Yaaruravae?