Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #265

என் நெஞ்சை, ஸ்வாமி, உமக்கே

I Give My Heart to Thee · En nenjai, swaami, umakkae

தற்பிரதிஷ்டை · Consecration · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

என் நெஞ்சை, ஸ்வாமி, உமக்கேEn nenjai, swaami, umakkae

ஈவாய்ப் படைக்கிறேன்:Eevaaip padaikkiraen:

நீர் இந்தக் காணிக்கையையேNeer indhak kaanikkaiyaiyae

கேட்டீரென்றறிவேன்.Kaetteerendrarivaen.

சரணம் 2 · Verse 2

என் மகனே, உன் நெஞ்சைத் தா,En maganae, un nenjaith thaa,

நீ இக்கடனைத் தீர்,Nee ikkadanaith theer,

வேறெங்கும் நீ சுகப்படVaerengum nee sugappada

மாட்டாயே என்கின்றீர்.Maattaayae engindreer.

சரணம் 3 · Verse 3

தேவா, நீர் அதைத் தயவாய்Deva, neer adhaith dhayavaai

அங்கீகரிக்கவும்;Angeegarikkavum;

நான் அதை உள்ள வண்ணமாய்Naan adhai ulla vannamaai

தாறேன் அன்பாயிரும்.Thaaraen anbaayirum.

சரணம் 4 · Verse 4

என் முழு நெஞ்சையும் அன்பாய்,En muzhu nenjaiyum anbaai,

ஸ்வாமி, நீர் என்றைக்கும்Swaami, neer endraikkum

அகமும் ஆலயமுமாய்Agamum aalayamumaai

படைத்துக் கொண்டிரும்.Padaiththuk kondirum.

சரணம் 5 · Verse 5

நீர் அதை ஆளும் கர்த்தரே,Neer adhai aalum Karththarae,

அத்தால் நான் பாக்கியன்,Aththaal naan baakkiyan,

நான் உலகத்தான் அல்லவே,Naan ulagaththaan allavae,

நான் உம்முடையவன்.Naan ummudaiyavan.