Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #286

காட்டும் வழி என் சந்தோஷம்

Kaattum vazhi en sandhosham

நம்பிக்கை · Trust · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

காட்டும் வழி என் சந்தோஷம்Kaattum vazhi en sandhosham

காட்டும் ஒளி போ வென்கிறார்;Kaattum oli po vengiraar;

நாடோறும் விசுவாசிப்பேன்;Naadorum visuvaasippaen;

மீட்பரின் பாதை பின் செல்வேன்.Meetparin paadhai pin selvaen.

சரணம் 2 · Verse 2

ஆழ்ந்த நீரில் நடத்துவார்,Aazhndha neeril nadaththuvaar,

கார் பள்ளம் சாய்ந்த குன்றிலும்Kaar pallam saaindha kundrilum

கோரப் புசல் முழங்கினும்,Korap pusal muzhanginum,

நேர் கரை கொண்டென்னைச் சேர்ப்பார்.Naer karai kondennaich saerppaar.

சரணம் 3 · Verse 3

பாதை காட்டி நித்ய ஜீவன்Paadhai kaatti nithya jeevan

பார் உன்னுடைய தென்கிறார்;Paar unnudaiya thengiraar;

பரீட்சை பாடத்தாலுன்னைPareetchai paadaththaalunnai

பரதீசுக்கும் ஆக்கிறார்.Paradheesukkum aakkiraar.

சரணம் 4 · Verse 4

துன்பம் அவர் நடத்துதல்Thunbam avar nadaththudhal

இன்ப கீதம் பாடச் செய்யும்;Inba geetham paadach seiyum;

என் பாத்ரம் ஈவால் நிரப்பும்,En paathram eevaal nirappum,

நன்கு சித்தம் செய்ய ஏவும்.Nangu siththam seiya evum.

சரணம் 5 · Verse 5

நடத்தும் பாதை பேரின்பம்Nadaththum paadhai paerinbam

நீரோடையின் புல்லென் மேய்ச்சல்Neerodaiyin pullen maeichal

அமர் நீர் நடத்த இன்பம்Amar neer nadaththa inbam

அதே வழி சீயோன் திடல்.Adhae vazhi seeyon thidal.

சரணம் 6 · Verse 6

சொந்த மந்தை நடத்துவார்;Sondha mandhai nadaththuvaar;

கன்மலை நீரைக் கொடுப்பார்;Kanmalai neeraik koduppaar;

கோல் தடியால் ஆற்றல் செய்வார்;Kol thadiyaal aatral seivaar;

தேவனிடம் கொண்டு சேர்ப்பார்.Devanidam kondu saerppaar.