என்றன் ஆத்ம நேசரே,Endran aathma Naesarae,
வெள்ளம் போன்ற துன்பத்தில்,Vellam pondra thunbaththil,
தாசன் திக்கில்லாமலே,Thaasan thikkillaamalae,
தடுமாறிப் போகையில்,Thadumaarip pogaiyil,
தஞ்சம் தந்து, ஏசுவே,Thanjam thandhu, Esuvae,
திவ்ய மார்பில் காருமே;Dhivya maarbil kaarumae;
அப்பால் கரை யேற்றியேAppaal karai yaetriyae
மோட்ச வீட்டில் சேருமே.Motcha veettil saerumae.
வல்ல தேவரீர் அல்லால்Valla Devareer allaal
வேறே தஞ்சம் இல்லையே;Vaerae thanjam illaiyae;
கைவிடாமல் நேசத்தால்Kaividaamal naesaththaal
ஆற்றித் தேற்றித் தாங்குமே,Aatrith thaetrith thaangumae,
நீரே என்றன் நம்பிக்கைNeerae endran nambikkai
நீர் சகாயம் செய்குவீர்;Neer sagaayam seiguveer;
ஏதுமற்ற ஏழையைச்Edhumatra ezhaiyaich
செட்டையாலே மூடுவீர்.Settaiyaalae mooduveer.
குறை யாவும் நீங்கிட,Kurai yaavum neengida,
நாதா நீர் சம்பூரணர்;Naathaa neer sambooranar;
திக்கற்றோரைத் தாங்கிடThikkatroraith thaangida
நீரே மா தயாபரர்.Neerae maa dhayaaparar.
நான் அசுத்த பாவிதான்,Naan asuththa paavidhaan,
நீரே சுத்தர், சுத்தரே;Neerae suththar, suththarae;
நான் அநீதி கேடுள்ளோன்,Naan aneedhi kaedullon,
நீர் நிறைந்த நித்யரே.Neer niraindha nithyarae.
பாவம் யாவும் மன்னிக்கPaavam yaavum mannikka
ஆரருள் அமைந்த நீர்Aararul amaindha neer
என்னைச் சுத்திகரிக்கEnnaich suththigarikka
அருள் பாயச் செய்குவீர்.Arul paayach seiguveer.
ஜீவ ஊற்றாம் ஏசுவே,Jeeva ootraam Esuvae,
என்றன் தாகம் தீருமே;Endran thaagam theerumae;
ஸ்வாமி, என்றும் என்னிலேSwaami, endrum ennilae
நீர் சுரந்து ஊறுமே.Neer surandhu oorumae.