இயேசு என் அஸ்திபாரம்Yesu en asthipaaram
ஆசை எனக்கவரே;Aasai enakkavarae;
நேச முசிப்பாறுதல்Naesa musippaarudhal
இயேசுவில் கண்டேன் யானும்.Iyaesuvil kandaen yaanum.
என்ன மதுரம் அவர்Enna madhuram avar
நன்னய நாமச் சுவை;Nannaya naamach suvai;
என்னகத்தில் நினைத்தால்Ennagaththil ninaiththaal
இன்னல் பறந்திடுமே.Innal parandhidumae.
பஞ்சம் பசியுடனேPanjam pasiyudanae
மிஞ்சும் துயர் வந்தாலும்,Minjum thuyar vandhaalum,
அஞ்சிடேன் இவற்றை என்Anjidaen ivatrai en
தஞ்சம் இயேசிருக்கையில்Thanjam iyaesirukkaiyil
லோகம் என்னை எதிர்த்துப்Logam ennai edhirththup
போவென்று சொல்லிடினும்Povendru sollidinum
சோகம் அடைவேனோ என்Sogam adaivaeno en
ஏகன் எனக்கிருக்க?Egan enakkirukka?
என்னென்ன மாயலோகEnnenna maayaloga
இன்னல் என்மேல் வந்தாலும்,Innal enmael vandhaalum,
முன்னும் பின்னுமாய் இயேசுMunnum pinnumaai Yesu
என்னை நடத்திடுவார்.Ennai nadaththiduvaar.
பாவத்தால் என்னில் வந்தPaavaththaal ennil vandha
சாபக்கறைகள் மாற்றிSaapakkaraigal maatri
சோபித நீதியுடைSopidha needhiyudai
ஆபரணமாய் ஈவார்.Aaparanamaai eevaar.