Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #33

என் இயேசுவை நான் என்றும் துதிப்பேன்

En Iyaesuvai naan endrum thudhippaen

தேவனை துதித்தல் · Adoration · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

என் இயேசுவை நான் என்றும் துதிப்பேன்En Iyaesuvai naan endrum thudhippaen

எளிமை ரூபம் எனக்காய் எடுத்தார்.Elimai roopam enakkaai eduththaar.

சரணம் 1 · Verse 1

என்னையும் யேசு அன்புடன் மீட்டார்;Ennaiyum yaesu anbudan meettaar;

எனக்குப் பரம சந்தோஷம் ஈந்தார்Enakkup Parama sandhosham eendhaar

சரணம் 2 · Verse 2

எத்தனை தானதர்மங்கள் செய்தும்,Eththanai thaanadharmangal seidhum,

நித்தமும் பூசை பலி செலுத்தியும்Niththamum poosai bali seluththiyum

அத்தனையும் நானே செய்து தீர்த்தும்,Aththanaiyum naanae seidhu theerththum,

சுத்தமாக்குவதில்லை எந்தன் மனதை,Suththamaakkuvadhillai endhan manadhai,

சுத்தன் இயேசு ராஜன் திரு இரத்தமோ,Suththan Yesu raajan thiru iraththamo,

சுத்திகரித்திடும் சகல பாவமும், – என்Suththigariththidum sagala paavamum, – en

பல்லவி · Chorus

என் இயேசுவை நான் என்றும் துதிப்பேன்En Iyaesuvai naan endrum thudhippaen

எளிமை ரூபம் எனக்காய் எடுத்தார்.Elimai roopam enakkaai eduththaar.

சரணம் 3 · Verse 3

வருத்தப்பட்டுப் பாவ பாரமும்Varuththappattup paava paaramum

சுமந்தோரை அழைத்திடும் நேசர்Sumandhorai azhaiththidum Naesar

நீசன் எந்தனின் ஜென்மப்பாவம்Neesan endhanin jenmappaavam

நீடித்திருக்கும் கன்மப் பாவம்Neediththirukkum kanmap paavam

நீக்கி விட்டார் என் பாவம் யாவையும்Neekki vittaar en paavam yaavaiyum

தள்ளவே மாட்டார் வரும் எவரையும், – என்Thallavae maattaar varum evaraiyum, – en

பல்லவி · Chorus

என் இயேசுவை நான் என்றும் துதிப்பேன்En Iyaesuvai naan endrum thudhippaen

எளிமை ரூபம் எனக்காய் எடுத்தார்.Elimai roopam enakkaai eduththaar.

சரணம் 4 · Verse 4

முட்கிரீடமும் அவர்க்குச் சூடMutkireedamum avarkkuch sooda

மோட்ச மெய்ப் பாக்கியம் எனக்குத் தேடMotcha meip baakkiyam enakkuth thaeda

ஆணி அவரின் கரங்கால்களில்Aani avarin karangaalgalil

ஆழ்ந்த காயம் அவர் விலாவில்Aazhndha kaayam avar vilaavil

சிறியேன் எனை இரட்சிக்க இயேசுSiriyaen enai iratchikka Yesu

சிலுவையில் தம் ஜீவனை விட்டார். – என்Siluvaiyil tham jeevanai vittaar. – En

பல்லவி · Chorus

என் இயேசுவை நான் என்றும் துதிப்பேன்En Iyaesuvai naan endrum thudhippaen

எளிமை ரூபம் எனக்காய் எடுத்தார்.Elimai roopam enakkaai eduththaar.