Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #342

விண் ஏகும்முன் நல் வார்த்தையை

Our Blest Redeemer Ere He Breathed · Vin egummun nal vaarththaiyai

பரிசுத்த ஆவி · Holy Spirit · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

விண் ஏகும்முன் நல் வார்த்தையைVin egummun nal vaarththaiyai

நம் மீட்பர் மொழிந்தார்;Nam Meetpar mozhindhaar;

மா நித்திய ஆறுதலை வாக்களித்தார்.Maa niththiya aarudhalai vaakkaliththaar.

சரணம் 2 · Verse 2

அவ்வாறு வல்ல ஆவியேAvvaaru valla aaviyae

சகாயராய் வந்தார்;Sagaayaraai vandhaar;

மெய் பக்தர் நைந்த நெஞ்சிலே சஞ்சரிப்பார்.Mei bakthar naindha nenjilae sanjarippaar.

சரணம் 3 · Verse 3

ஆகாத சிந்தை தோன்றினால்Aagaadha sindhai thondrinaal

மேலிடவே ஒட்டார்;Maelidavae ottaar;

வீண் பயமும் மென் சொல்லினால் அகற்றுவார்.Veen bayamum men sollinaal agatruvaar.

சரணம் 4 · Verse 4

நற்குணம், செய்கை விருப்பம்Narkunam, seigai viruppam

மெய் பக்தி யாவுமே;Mei bakthi yaavumae;

தேவாவியாலே மாத்திரம் உண்டாகுமே.Devaviyaalae maaththiram undaagumae.

சரணம் 5 · Verse 5

மா தூய நேச ஆவியேMaa thooya naesa aaviyae

தாசர்க் கிரங்குமே;Thaasark kirangumae;

சுத்தாங்கம் தந்து நெஞ்சிலே வந்தாளுமே.Suththaangam thandhu nenjilae vandhaalumae.