Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #359

மேன்மேலும் நீர் தாரும் நல் நம்பிக்கையும்

More Holiness, Give Me · Maenmaelum neer thaarum nal nambikkaiyum

ஜெபம் · Prayer · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

மேன்மேலும் நீர் தாரும் நல் நம்பிக்கையும்,Maenmaelum neer thaarum nal nambikkaiyum,

மெய்யாம் விசுவாசம் அன்போடுண்மையும்.Meiyaam visuvaasam anbodunmaiyum.

மேன் மேலுமே ஊக்கம் உற்சாகத்தையும்Maen maelumae ookkam urchaagaththaiyum

உண்டாக்கும்; மெய்ப்பக்தி வைராக்கியமும்.Undaakkum; meippakthi vairaakkiyamum.

சரணம் 2 · Verse 2

மேன்மேலும் நீர் தாரும் மெய் ஞானத்தையும்Maenmaelum neer thaarum mei gnaanaththaiyum

உம் பேரிலே சாரும் சற் குணத்தையும்Um paerilae saarum sar kunaththaiyum

மேன் மேலும் உண்டாக்கும் நற் சிந்தையையும்Maen maelum undaakkum nar sindhaiyaiyum

ஆரருளை நாடும் பேராசையையும்.Aararulai naadum paeraasaiyaiyum.

சரணம் 3 · Verse 3

மேன் மேலும் நீர் தாரும் சுத்தாங்கத்தையும்,Maen maelum neer thaarum suththaangaththaiyum,

மாசற்ற உள்ளான நற் சுபாவத்தையும்,Maasatra ullaana nar supaavaththaiyum,

தீப் பாவத்தை வெல்லும் வல்லாவியையும்,Dheep paavaththai vellum vallaaviyaiyum,

தேவாவியால் வெற்றிக் கெம்பீரத்தையும்.Devaviyaal vetrik gembeeraththaiyum.