Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #36

பக்தி விநயத்துடனே பணிவோம் கர்த்தரை

Bakthi vinayaththudanae panivom Karththarai

ஆராதனை ஆரம்பம் · Beginning Of Worship · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

பக்தி விநயத்துடனே பணிவோம் கர்த்தரை;Bakthi vinayaththudanae panivom Karththarai;

அவரின் வசனம் கேட்டு,Avarin vasanam kaettu,

அதால் நடுங்குவோம்;Adhaal nadunguvom;

அதால் நடுங்குவோம்.Adhaal nadunguvom.

சரணம் 2 · Verse 2

கர்த்தரால் மீட்கப் பட்டோரே!Karththaraal meetkap pattorae!

களிப்பாய்ப் பாடுங்கள்,Kalippaaip paadungal,

மோட்சப் பிரயாணிகளே,Motchap pirayaanigalae,

முழக்க மிடுங்கள்; முழக்க மிடுங்கள்.Muzhakka midungal; muzhakka midungal.

சரணம் 3 · Verse 3

ஓ! ஏசு சிருஷ்டி கர்த்தாவே!O! Esu sirushti Karththaavae!

எம் ஜீவன் சுகமே,Em jeevan sugamae,

உமக்கே கனம், மகிமை,Umakkae kanam, magimai,

என்றும் உரியது; என்றும் உரியது.Endrum uriyadhu; endrum uriyadhu.