Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #378

பாதகன் என் வினை தீர், ஐயா கிருபாகரா, நின்

Paadhagan en vinai theer, aiyaa kirupaagaraa, nin

ஜெபம் · Prayer · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

பாதகன் என் வினை தீர், ஐயா கிருபாகரா, நின்Paadhagan en vinai theer, aiyaa kirupaagaraa, nin

பாடு நினைந் தெனைச் சேர், ஐயா.Paadu ninain thenaich saer, aiyaa.

சரணம் 1 · Verse 1

தீ தகற்றவே சிறந்த சேண்Thee thagatravae sirandha saen

உலகினிமை விட்டுப்Ulaginimai vittup

பூதலத் துகந்து வந்த புண்ணியனே,Poodhalath thugandhu vandha punniyanae,

ஏசு தேவா – பாதEsu Deva – paadha

சரணம் 2 · Verse 2

வந்துறும் எப் பாவிகளையும் – அங்கீகரிக்கும்Vandhurum ep paavigalaiyum – angeegarikkum

மாசில்லாத ஏசு நாதனே,Maasillaadha Esu Naathanae,

உன்றன் இடம் வந்துளமேUndran idam vandhulamae

உருகி அழுது மாதுஅன்றுUrugi azhudhu maadhuandru

முந்தி மிகச் செய்த பாவம் முழுதும்Mundhi migach seidha paavam muzhudhum

பொறுத்தாய் அன்றோ? – பாதPoruththaai andro? – Paadha

பல்லவி · Chorus

பாதகன் என் வினை தீர், ஐயா கிருபாகரா, நின்Paadhagan en vinai theer, aiyaa kirupaagaraa, nin

பாடு நினைந் தெனைச் சேர், ஐயா.Paadu ninain thenaich saer, aiyaa.

சரணம் 3 · Verse 3

சிந்தின உன் உதிரம் அதே – தீயோன் மறத்தைSindhina un udhiram adhae – theeyon maraththai

சின்ன பின்னம் செய்ய வல்லதே;Sinna pinnam seiya valladhae;

பந்தம் உற உன்றன் பக்கத்தில்Pandham ura undran pakkaththil

இருந்த கள்வனையேIrundha kalvanaiyae

விந்தை யுறவே ரட்சித்தVindhai yuravae ratchiththa

வேதனே,அவ்விதமாயே – பாதVaedhanae,avvidhamaayae – paadha

பல்லவி · Chorus

பாதகன் என் வினை தீர், ஐயா கிருபாகரா, நின்Paadhagan en vinai theer, aiyaa kirupaagaraa, nin

பாடு நினைந் தெனைச் சேர், ஐயா.Paadu ninain thenaich saer, aiyaa.

சரணம் 4 · Verse 4

அற்ப விசுவாச முளன் ஆம் – அடியேனை இனிArpa visuvaasa mulan aam – adiyaenai ini

ஆதரிப்பதார் உன் தஞ்சமே;Aadharippadhaar un thanjamae;

தற்பரா, உனைத் தரிசித் தன்றிTharparaa, unaith dharisith thandri

நம்பிடேன்,எனவேNambidaen,enavae

செப்பிய தோமாவுக்குப் போல்,Seppiya thomaavukkup pol,

திரு உருக் காட்சி தந்து – பாதThiru uruk kaatchi thandhu – paadha

பல்லவி · Chorus

பாதகன் என் வினை தீர், ஐயா கிருபாகரா, நின்Paadhagan en vinai theer, aiyaa kirupaagaraa, nin

பாடு நினைந் தெனைச் சேர், ஐயா.Paadu ninain thenaich saer, aiyaa.