Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #4

நாம் தேவ சந்நிதானத்தில்

To God on High be Thanks and Praise · Naam Deva sannidhaanaththil

தேவனை துதித்தல் · Adoration · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

நாம் தேவ சந்நிதானத்தில்Naam Deva sannidhaanaththil

மகா மகிழ்ச்சியாகMahaa magizhchiyaaga

வந்தாதி கர்த்தரண்டையில்Vandhaadhi Karththarandaiyil

வணக்கஞ்செய்வோமாக.Vanakkanj seivomaaga.

யேகோவாவுக்கு நிகரார்?Yegovaavukku nigaraar?

யாவும் நன்றாகச் செய்கிறார்;Yaavum nandraagach seigiraar;

கர்த்தாவுக்கே புகழ்ச்சி!Karththaavukkae pugazhchi!

சரணம் 2 · Verse 2

கர்த்தாதி கர்த்தர் ஞானத்தால்Karththaadhi Karththar gnaanaththaal

யாவற்றையும் நன்றாகYaavatraiyum nandraaga

ஸ்ருஷ்டித்துத் திட்டஞ் செய்ததால்,Srushtiththuth thittanj seidhadhaal,

மகா வணக்கமாகMahaa vanakkamaaga

விண், மண், கடல், ஆகாசமும்Vin, man, kadal, aagaasamum

விடாமல் துதி செலுத்தும்;Vidaamal thudhi seluththum;

கர்த்தாவுக்கே புகழ்ச்சி!Karththaavukkae pugazhchi!

சரணம் 3 · Verse 3

மேலான அற்புதங்களைMaelaana arpudhangalai

செய்தென்னைப் பூரிப்பாக்கி,Seidhennaip poorippaakki,

என்மேல் விழுந்த பாரத்தைEnmael vizhundha paaraththai

இரக்கமாய் விலக்கிIrakkamaai vilakki

ரட்சித்த மா தயாபரர்Ratchiththa maa dhayaabarar

துதிக்கு என்றும் பாத்திரர்;Thudhikku endrum paaththirar;

கர்த்தாவுக்கே புகழ்ச்சி!Karththaavukkae pugazhchi!

சரணம் 4 · Verse 4

மெய் மார்க்கத்தாரே, கர்த்தரைத்Mei maarkkaththaarae, Karththaraith

துதித்துக் கொண்டிருங்கள்;Thudhiththuk kondirungal;

அவர் சிறந்த நாமத்தைAvar sirandha naamaththai

எந்நேரமும் தொழுங்கள்;Ennaeramum thozhungal;

அவர் எல்லாம் படைத்தவர்;Avar ellaam padaiththavar;

கர்த்தாதி கர்த்தரானவர்;Karththaadhi Karththaraanavar;

கர்த்தாவுக்கே புகழ்ச்சி!Karththaavukkae pugazhchi!