Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #404

தீயோர் சொல்வதைக் கேளாமல்

Theeyor solvadhaik kaelaamal

நியாயப்பிரமாணமும் ஓய்வுநாளும் · The Law And The Sabbath · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

தீயோர் சொல்வதைக் கேளாமல்,Theeyor solvadhaik kaelaamal,

பாவத்துக்கு விலகி,Paavaththukku vilagi,

பரிகாசரைச் சேராமல்,Parigaasaraich saeraamal,

நல்லாரோடு பழகி,Nallaarodu pazhagi,

கர்த்தர் தந்த வேதம் நம்பி,Karththar thandha vaedham nambi,

வாஞ்சை வைத்து அதைத்தான்Vaanjai vaiththu adhaiththaan

ராப்பகலும் ஓதும் ஞானிRaappagalum odhum gnaani

என்றும் வாழும் பாக்கியவான்.Endrum vaazhum baakkiyavaan.

சரணம் 2 · Verse 2

நதி ஓரத்தில் வாடாமல்,Nadhi oraththil vaadaamal,

நடப்பட்டு வளர்ந்து,Nadappattu valarndhu,

கனி தந்து உதிராமல்Kani thandhu udhiraamal

இலை என்றும் பசந்துIlai endrum pasandhu

அசைவின்றிக் காற்றைத் தாங்கும்Asaivindrik kaatraith thaangum

மரம் போலவே நிற்பான்;Maram polavae nirpaan;

அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்Avan seivadhellaam vaaikkum

ஆசீர்வாதம் பெறுவான்.Aaseervaadham peruvaan.

சரணம் 3 · Verse 3

தீயோர் பதர் போல் நில்லாமல்Theeyor padhar pol nillaamal

தீர்ப்பு நாளில் ஒழிவார்,Theerppu naalil ozhivaar,

நல்லோர் சபையில் சேராமல்,Nallor sapaiyil saeraamal,

வெட்கி நைந்து அழிவார்.Vetki naindhu azhivaar.

இங்கே பாவி செழித்தாலும்,Ingae paavi sezhiththaalum,

பாவப் பலன் நாசந்தான்Paavap palan naasandhaan

இங்கே நல்லோன் துக்கித்தாலும்Ingae nallon thukkiththaalum

கர்த்தர் வீட்டில் மகிழ்வான்.Karththar veettil magizhvaan.