Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #419

ஓய்வுநாள் விண்ணில் கொண்டாடுகின்றோர்

Oh! What the Joy and the Glory · Oivunaal vinnil kondaadugindror

நியாயப்பிரமாணமும் ஓய்வுநாளும் · The Law And The Sabbath · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

ஓய்வுநாள் விண்ணில் கொண்டாடுகின்றோர்Oivunaal vinnil kondaadugindror

பேரின்ப மேன்மை யார் கூறவல்லோர்?Paerinba maenmai yaar kooravallor?

வீரர்க்குக் கிரீடம் தொய்ந்தோர் சுகிப்பார்;Veerarkkuk kireedam thoindhor sugippaar;

தேவன்தாம் யாவிலும் யாவும் ஆவார்.Devandhaam yaavilum yaavum aavaar.

சரணம் 2 · Verse 2

ராஜ சிங்காசன மாட்சிமையும்,Raaja singaasana maatchimaiyum,

அங்குள்ளோர் வாழ்வும் சமாதானமும்,Angullor vaazhvum samaadhaanamum,

இவை எல்லாங் கண்டறிந்தோரில் யார்Ivai ellaan kandarindhoril yaar

அவ்வண்ணம் மாந்தர்க்கு நன்குரைப்பார்?Avvannam maandharkku nanguraippaar?

சரணம் 3 · Verse 3

மெய்ச்சமாதான தரிசனமாம்Meichamaadhaana dharisanamaam

அக்கரை எருசலேம் என்போம் நாம்;Akkarai erusalaem enbom naam;

ஆசிக்கும் நன்மை கைகூடும் அங்கே,Aasikkum nanmai kaigoodum angae,

வேண்டுதல் ஓர்காலும் வீண் ஆகாதே.Vaendudhal orgaalum veen aagaadhae.

சரணம் 4 · Verse 4

சீயோனின் கீதத்தைப் பாடாதங்கும்Seeyonin geethaththaip paadaadhangum

தடுக்க ஏலுமோ எத்தொல்லையும்?Thadukka elumo eththollaiyum?

பேரருள் ஈந்திடும், தேவனே, நீர்Paerarul eendhidum, Devanae, neer

பக்தரின் ஸ்தோத்திரம் என்றுமே ஏற்பீர்.Baktharin sthoththiram endrumae erpeer.

சரணம் 5 · Verse 5

அங்குள்ள ஓய்வுநாள் நித்தியமாம்,Angulla oivunaal niththiyamaam,

விடிதல், முடிதல் இல்லாததாம்;Vididhal, mudidhal illaadhadhaam;

தூதரும் பக்தரும் ஓயாமலேThoodharum baktharum oyaamalae

ஓர் ஜெய கீர்த்தனம் பாடுவாரே.Or jeya keerththanam paaduvaarae.

சரணம் 6 · Verse 6

பாபிலோன் போன்ற இப்பாரின் சிறைPaapilon pondra ippaarin sirai

மீண்டு, நம் தேசம் போய்ச் சேரும் வரை,Meendu, nam thaesam poich saerum varai,

எருசலேமை நாம் இப்பொழுதும்Erusalaemai naam ippozhudhum

வாஞ்சித்து ஏங்கித் தவித்திடுவோம்.Vaanjiththu engith thaviththiduvom.

சரணம் 7 · Verse 7

தந்தையினாலும், குமாரனிலும்,Thandhaiyinaalum, Kumaaranilum,

ஆவியின் மூலமும் யாவும் ஆகும்;Aaviyin moolamum yaavum aagum;

திரியேக தேவனை விண் மண்ணுள்ளார்Thiriyaega Devanai vin mannullaar

சாஷ்டாங்கமாய் வீழ்ந்து வாழ்த்திடுவார்.Saashtaangamaai veezhndhu vaazhththiduvaar.