Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #463

சீரார் விவாகம் ஏதேன் காவிலே

Seeraar vivaagam edhaen kaavilae

பரிசுத்த திருமணம் · Holy Matrimony · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

சீரார் விவாகம் ஏதேன் காவிலேSeeraar vivaagam edhaen kaavilae

நேராய் அமைத்த தேவ தேவனே!Naeraai amaiththa Deva Devanae!

தாராய்! மன்றலாசியே!Thaaraai! Mandralaasiyae!

வாராய்! சுபம் சேரவே!Vaaraai! Supam saeravae!

நேயனே! மகா தூய தேவ தேவனேNaeyanae! Mahaa thooya Deva Devanae

சீர்மேவும் மெய் மனாசி நீ தா வா!Seermaevum mei manaasi nee thaa vaa!

நேயனே! மகா தூய தேவ தேவனே!Naeyanae! Mahaa thooya Deva Devanae!

சீர் மேவவே ஆசிதா!Seer maevavae aasidhaa!

சரணம் 2 · Verse 2

நாடோறுமே செல் பாதை தீபமாய்Naadorumae sel paadhai dheepamaai

நாடு உயர்ந்த வேத நூல் அதைத்Naadu uyarndha vaedha nool adhaith

தேடி துணை கொண்டன்பாய்Thaedi thunai kondanbaai

நீடித்திவர் வாழ்ந்திட!Neediththivar vaazhndhida!

சரணம் 3 · Verse 3

ஆன்றோர் எந்நாளும் போற்றும் சேயரும்Aandror ennaalum potrum saeyarum

வான்றோய் சிறந்த கல்வி செல்வமும்Vaandroi sirandha kalvi selvamum

சான்றோர் போற்றும் நேயரும்Saandror potrum naeyarum

தோன்றித் திகழ் சீரருள்!Thondrith thigazh seerarul!

சரணம் 4 · Verse 4

வாழ்க வாழ்க! என்றும் இம்மணர்!Vaazhga vaazhga! Endrum immanar!

வாழ்க! இலங்கும் தந்தை தாயாரும்Vaazhga! Ilangum thandhai thaayaarum

வாழ்க! சுற்றத்தார் அன்பர்Vaazhga! Sutraththaar anbar

வாழ்க! சுபமன்றலும்.Vaazhga! Supamandralum.