Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #467

இந்த மங்களம் செழிக்கவே கிருபை செய்யும்

Indha mangalam sezhikkavae kirupai seiyum

பரிசுத்த திருமணம் · Holy Matrimony · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

இந்த மங்களம் செழிக்கவே கிருபை செய்யும்.Indha mangalam sezhikkavae kirupai seiyum.

எங்கள் ஏசு கிறிஸ்து தேவனே.Engal Esu Kiristhu Devanae.

சரணம் 1 · Verse 1

சுந்தரக் கானாவின் மணப் பந்தலில்Sundharak kaanaavin manap pandhalil

சென்றம் பணத்தைக்Sendram panaththaik

கந்த ரசமாகச் செய்த விந்தைபோல்,Kandha rasamaagach seidha vindhaipol,

இங்கேயும் வந்து – இந்தIngaeyum vandhu – indha

சரணம் 2 · Verse 2

ஆதி கொடுத் தன்பை எடுத்தாய்; மனுடர் தமைAadhi koduth thanbai eduththaai; manudar thamai

ஆணும் பெண்ணுமாகப் படைத்தாய்;Aanum pennumaagap padaiththaai;

நீதி வரம் நாலுங் கொடுத்தாய்; பெற்றுப் பெருகிNeedhi varam naalun koduththaai; petrup perugi

நிற்க உலகத்தில் விடுத்தாய்;Nirka ulagaththil viduththaai;

மாதவர் பணியும் வேத போதனே,Maadhavar paniyum vaedha podhanae,

அந்தப்படி உன் ஆதரவைக் கொண்டு திவ்யAndhappadi un aadharavaik kondu dhivya

நீதியை நம்பிப் புரிந்த – இந்தNeedhiyai nambip purindha – indha

பல்லவி · Chorus

இந்த மங்களம் செழிக்கவே கிருபை செய்யும்.Indha mangalam sezhikkavae kirupai seiyum.

எங்கள் ஏசு கிறிஸ்து தேவனே.Engal Esu Kiristhu Devanae.

சரணம் 3 · Verse 3

தக்க ஆபிராமும் விண்டனன்; அதனை மனThakka aapiraamum vindanan; adhanai mana

துக்குள் எலியேசர் கொண்டனன்;Thukkul eliyaesar kondanan;

முக்ய ஹாரன் நிலத்தண்டினன்; நினைத்தபடிMukya haaran nilaththandinan; ninaiththapadi

பத்திய மதாகக் கண்டனன்;Paththiya madhaagak kandanan;

பக்குவம் உரைத்திடாPakkuvam uraiththidaa

ரெபெக்காளும் ஈசாக்குவுக்குத்Repekkaalum eesaakkuvukkuth

தக்க மண வாளியாகத்Thakka mana vaaliyaagath

தந்த தயை செய்தாற் போலே – இந்தThandha dhayai seidhaar polae – indha

பல்லவி · Chorus

இந்த மங்களம் செழிக்கவே கிருபை செய்யும்.Indha mangalam sezhikkavae kirupai seiyum.

எங்கள் ஏசு கிறிஸ்து தேவனே.Engal Esu Kiristhu Devanae.

சரணம் 4 · Verse 4

சத்திய வே தத்தின் வாசனே, அருளும் பரிSaththiya vae thaththin vaasanae, arulum pari

சுத்த சுவிசேட நேசனே,Suththa suvisaeda naesanae,

பக்தர்கள் பவ விமோசனே, பழுதணுவும்Bakthargal pava vimosanae, pazhudhanuvum

அற்ற கிறிஸ் தேசு ராஜனே,Atra Kiris thaesu raajanae,

வெற்றியால் யாக்கோபுவுக்குVetriyaal yaakkopuvukku

முற்றிலும் அளித்த பேறாய்Mutrilum aliththa paeraai

புத்திர சம்பத் துண்டாக்கி நித்தியPuththira sambath thundaakki niththiya

சுப சோபனமாய் – இந்தSupa sopanamaai – indha

பல்லவி · Chorus

இந்த மங்களம் செழிக்கவே கிருபை செய்யும்.Indha mangalam sezhikkavae kirupai seiyum.

எங்கள் ஏசு கிறிஸ்து தேவனே.Engal Esu Kiristhu Devanae.