Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #486

ஐயையோ! மதி தானே? மது

Aiyaiyo! Madhi thaanae? Madhu

இச்சையடக்கம் · Temperance · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

ஐயையோ! மதி தானே? மதுAiyaiyo! Madhi thaanae? Madhu

பானம் அருந்தலேனோ?Paanam arundhalaeno?

சரணம் 1 · Verse 1

வையகமும் அதின் மேன்மைகளும் அவVaiyagamum adhin maenmaigalum ava

மா மென்றுணர்ந்தனையே! – பின்னும்Maa mendrunarndhanaiyae! – Pinnum

மெய்யழிவு செய்யும் பீரும் பிராந்தியும்,Meiyazhivu seiyum peerum piraandhiyum,

விஸ்கியும் நேர்த்தனையே! நேசா!Viskiyum naerththanaiyae! Naesaa!

- ஐயையோ- Aiyaiyo

பல்லவி · Chorus

ஐயையோ! மதி தானே? மதுAiyaiyo! Madhi thaanae? Madhu

பானம் அருந்தலேனோ?Paanam arundhalaeno?

சரணம் 2 · Verse 2

சர்ப்பத்தைப் போலவே தீண்டியுன் மேனியைத்Sarppaththaip polavae theendiyun maeniyaith

தான் கொள்ளை கொள்ளும் அது; – நீயோThaan kollai kollum adhu; – neeyo

துர்ப் புத்தியாலே மயங்கி மருண்டு வீண்Thurp puththiyaalae mayangi marundu veen

தொந்தரை சேர்ப்பதேது? நேசா!Thondharai saerppadhaedhu? Naesaa!

– ஐயையோ– Aiyaiyo

பல்லவி · Chorus

ஐயையோ! மதி தானே? மதுAiyaiyo! Madhi thaanae? Madhu

பானம் அருந்தலேனோ?Paanam arundhalaeno?

சரணம் 3 · Verse 3

மானமும் போகும், மகிமையும் போகும்Maanamum pogum, magimaiyum pogum

மரியாதையும் போகும் – அவMariyaadhaiyum pogum – ava

மானமும் மா பெலவீனமும், ஊனமும்Maanamum maa pelaveenamum, oonamum

வந்து சூழலாகும் – நேசா! – ஐயையோVandhu soozhalaagum – naesaa! – Aiyaiyo

பல்லவி · Chorus

ஐயையோ! மதி தானே? மதுAiyaiyo! Madhi thaanae? Madhu

பானம் அருந்தலேனோ?Paanam arundhalaeno?

சரணம் 4 · Verse 4

கண்கள் சிவந்து, கை, கால்கள் தளர்ந்திருKangal sivandhu, kai, kaalgal thalarndhiru

காதுகளும் அடைக்கும் – காயப்Kaadhugalum adaikkum – kaayap

புண்களும், வாந்தியும், பொன்னான மேனியில்Pungalum, vaandhiyum, ponnaana maeniyil

பூஷணமாய்ப் படியும் – நேசா!– ஐயையோPooshanamaaip padiyum – naesaa!– Aiyaiyo

பல்லவி · Chorus

ஐயையோ! மதி தானே? மதுAiyaiyo! Madhi thaanae? Madhu

பானம் அருந்தலேனோ?Paanam arundhalaeno?

சரணம் 5 · Verse 5

குடித்தவன் பேச்சு பழிப்பல்லவோ செவிKudiththavan paechu pazhippallavo sevi

கூர்த்து கேட்பாரோ? – மிகப்Koorththu kaetpaaro? – Migap

பத்தவனென்றாலும் மடத்தனமே யென்பர்Paththavanendraalum madaththanamae yenbar

பாழுங்குடியின் சீரோ? – நேசா!– ஐயையோPaazhungudiyin seero? – Naesaa!– Aiyaiyo

பல்லவி · Chorus

ஐயையோ! மதி தானே? மதுAiyaiyo! Madhi thaanae? Madhu

பானம் அருந்தலேனோ?Paanam arundhalaeno?

சரணம் 6 · Verse 6

புத்தியுங் கெட்டுப் பொறுமையுங் கெட்டுப்Puththiyun kettup porumaiyun kettup

புகழுடம்புங் கெட்டு தேவPugazhudambun kettu Deva

பத்தியும் கெட்டுப் பரன் கிருபையுங் கெட்டுப்Paththiyum kettup paran kirupaiyun kettup

பழிப்புக் காளாகாதே! நேசா! - ஐயையோPazhippuk kaalaagaadhae! Naesaa! - Aiyaiyo

பல்லவி · Chorus

ஐயையோ! மதி தானே? மதுAiyaiyo! Madhi thaanae? Madhu

பானம் அருந்தலேனோ?Paanam arundhalaeno?

சரணம் 7 · Verse 7

குடியர், வெறியர், மதுப்பானப் பிரியர்Kudiyar, veriyar, madhuppaanap piriyar

கொலைகாரர் ஆவர் நிசம்! - இவர்,Kolaigaarar aavar nisam! - Ivar,

முடிவு பயங்கரம் மோட்சமுமில்லைMudivu bayangaram motchamumillai

முடியா திவர் நாசம் நேசா! - ஐயையோMudiyaa thivar naasam naesaa! - Aiyaiyo

பல்லவி · Chorus

ஐயையோ! மதி தானே? மதுAiyaiyo! Madhi thaanae? Madhu

பானம் அருந்தலேனோ?Paanam arundhalaeno?