Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #496

சபையின் அஸ்திபாரம் நன் மீட்பர் க்றிஸ்துவே

The Church has One Foundation · Sapaiyin asthipaaram nan Meetpar Kristhuvae

விசேஷ சமயங்கள் · Special Occasions · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

சபையின் அஸ்திபாரம் நன் மீட்பர் க்றிஸ்துவே;Sapaiyin asthipaaram nan Meetpar Kristhuvae;

சபையின் ஜன்மாதாரம்; அவரின் வார்த்தையே;Sapaiyin janmaadhaaram; avarin vaarththaiyae;

தம் மணவாட்டியாக வந்ததைத் தேடினார்;Tham manavaattiyaaga vandhadhaith thaedinaar;

தமக்குச் சொந்தமாக மரித்ததைக் கொண்டார்.Thamakkuch sondhamaaga mariththadhaik kondaar.

சரணம் 2 · Verse 2

எத்தேசத்தார் சேர்ந்தாலும், சபை ஒன்றேEththaesaththaar saerndhaalum, sapai ondrae

ஒன்றாம்;Ondraam;

ஒரே விஸ்வாசத்தாலும் ஒரே ரட்சிப்புண்டாம்.Orae viswaasaththaalum orae ratchippundaam.

ஒரே தெய்வீக நாமம் சபையை இணைக்கும்;Orae theiveega naamam sapaiyai inaikkum;

ஓர் திவ்ய ஞானாகாரம் பக்தரைப் போஷிக்கும்.Or dhivya gnaanaagaaram baktharaip poshikkum.

சரணம் 3 · Verse 3

புறத்துள்ளோர் விரோதம் பயத்தை உறுத்தும்,Puraththullor virodham bayaththai uruththum,

உள்ளானவரின் த்ரோகம் கிலேசப் படுத்தும்;Ullaanavarin throgam kilaesap paduththum;

பக்தர் ஓயாத சத்தம் எம் மட்டும்? என்பதாம்;Bakthar oyaadha saththam em mattum? Enbadhaam;

ராவில் நிலைத்த துக்கம் காலையில் களிப்பாம்.Raavil nilaiththa thukkam kaalaiyil kalippaam.

சரணம் 4 · Verse 4

மேலான வான காட்சி கண்டாசீர் வாதத்தைMaelaana vaana kaatchi kandaaseer vaadhaththai

பெற்று, போர் ஓய்ந்து வெற்றி சிறந்து, மாட்சிமைPetru, por oindhu vetri sirandhu, maatchimai

அடையும் பரியந்தம் நீங்கா உழைப்பிலும்Adaiyum pariyandham neengaa uzhaippilum

மங்காத சமாதானம் மெய்ச் சபை வாஞ்சிக்கும்.Mangaadha samaadhaanam meich sapai vaanjikkum.