Tamil Hymns
சிறுவர் கீதங்கள் · Children's Songs #508

ஏசு எங்கள் மேய்ப்பர், கண்ணீர் துடைப்பார்

Jesus is Our Shepherd · Esu engal Maeippar, kanneer thudaippaar

சிறுவர் கீதங்கள் · Children's Songs · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

ஏசு எங்கள் மேய்ப்பர், கண்ணீர் துடைப்பார்;Esu engal Maeippar, kanneer thudaippaar;

மார்பில் சேர்த்தணைத்து, பயம் நீக்குவார்;Maarbil saerththanaiththu, bayam neekkuvaar;

துன்பம் நேரிட்டாலும், இன்பம் ஆயினும்,Thunbam naerittaalum, inbam aayinum,

ஏசுவின் பின் செல்வோம், பாலர் யாவரும்.Esuvin pin selvom, paalar yaavarum.

சரணம் 2 · Verse 2

நல்ல மேய்ப்பர் சத்தம் நன்றாய் அறிவோம்;Nalla Maeippar saththam nandraai arivom;

காதுக் கின்பமாகக் கேட்டுக் களிப்போம்.Kaadhuk kinbamaagak kaettuk kalippom.

கண்டித்தாலும் நேசர் ஆற்றித் தேற்றுவார்;Kandiththaalum Naesar aatrith thaetruvaar;

நாங்கள் பின்னே செல்ல, வழி காட்டுவார்.Naangal pinnae sella, vazhi kaattuvaar.

சரணம் 3 · Verse 3

ஆட்டுக்காக மேய்ப்பர் ரத்தம் சிந்தினார்;Aattukkaaga Maeippar raththam sindhinaar;

அதில் மூழ்குவோரே சுத்தர் ஆகுவார்;Adhil moozhguvorae suththar aaguvaar;

பாவக் குணம் நீக்கி, முற்றும் ரட்சிப்பார்;Paavak kunam neekki, mutrum ratchippaar;

திவ்ய தூய சாயல் ஆக மாற்றுவார்.Dhivya thooya saayal aaga maatruvaar.

சரணம் 4 · Verse 4

ஏசு நல்ல மேய்ப்பர் ஆட்டைப் போஷிப்பார்;Esu nalla Maeippar aattaip poshippaar;

ஓநாய்கள் வந்தாலும் தொடவே ஒட்டார்;Onaaigal vandhaalum thodavae ottaar;

சாவின் பள்ளத்தாக்கில் அஞ்சவே மாட்டோம்;Saavin pallaththaakkil anjavae maattom;

பாதாளத்தின் மேலும் ஜெயங் கொள்ளுவோம்.Paadhaalaththin maelum jeyan kolluvom.