பாலரே, ஓர் நேசர் உண்டுPaalarae, or Naesar undu
விண் மோட்ச வீட்டிலே;Vin motcha veettilae;
நீங்கா இந்நேசர் அன்புNeengaa innaesar anbu
ஓர் நாளும் குன்றாதே;Or naalum kundraadhae;
உற்றாரின் நேசம் யாவும்Utraarin naesam yaavum
நாள் செல்ல மாறினும்Naal sella maarinum
இவ்வன்பர் திவ்விய நேசம்Ivvanbar dhivviya naesam
மாறாமல் நிலைக்கும்.Maaraamal nilaikkum.
பாலரே, ஓர் நேசர் உண்டுPaalarae, or Naesar undu
விண் மோட்ச நாட்டிலே;Vin motcha naattilae;
பேர் வாழ்வுண்டாக இயேசுPaer vaazhvundaaga Yesu
அங்கரசாள் வாரே;Angarasaal vaarae;
ஒப்பற்ற அந்த வீட்டைOppatra andha veettai
நாம் நாட வேண்டாமோ?Naam naada vaendaamo?
அங்குள்ளோர் இன்ப வாழ்வில்Angullor inba vaazhvil
ஓர் தாழ்ச்சி தானுண்டோ?Or thaazhchi thaanundo?
பாலரே, ஓர் கிரீடம் உண்டுPaalarae, or kireedam undu
விண் மோட்ச வீட்டில், நீர்Vin motcha veettil, neer
நல் மீட்பரின் பேரன்பால்Nal Meetparin paeranbaal
பொற் கிரீடம் அணிவீர்;Por kireedam aniveer;
இப்போது மீட்பைப் பெற்றுIppodhu meetpaip petru
மா நேசர் பின் சென்றார்,Maa Naesar pin sendraar,
இவ்வாடா ஜீவ கிரீடம்Ivvaadaa jeeva kireedam
அப்போது சூடுவார்.Appodhu sooduvaar.
பாலரே, ஓர் கீதம் உண்டுPaalarae, or geetham undu
விண் மோட்ச வீட்டிலே;Vin motcha veettilae;
மா ஜெய கீதம் பாடMaa jeya geetham paada
ஓர் வீணையும் உண்டே;Or veenaiyum undae;
அந்நாட்டின் இன்பம் எல்லாம்Annaattin inbam ellaam
நம் மீட்பர்க்குரிமை;Nam Meetparkkurimai;
நீர் அவரிடம் வாரும்,ஈவார் அவ்வின்பத்தை.Neer avaridam vaarum,eevaar avvinbaththai.