Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #564

ஓர் நல்ல மேய்ப்பர் மந்தையில்

There were Ninety and Nine · Or nalla Maeippar mandhaiyil

பாக்கியமான நம்பிக்கை · Blessed Hope · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

ஓர் நல்ல மேய்ப்பர் மந்தையில்Or nalla Maeippar mandhaiyil

நூறாடுகள் உண்டாம்.Nooraadugal undaam.

ஓர் சாயங்காலம் ஆடொன்றுOr saayangaalam aadondru

காணாமற் போயிற்றாம்.Kaanaamar poyitraam.

ஏகாந்தமான காட்டிலேEgaandhamaana kaattilae

நல் மேய்ப்பர் தன் ஆட்டைத் தேடினார் (2)Nal Maeippar than aattaith thaedinaar (2)

சரணம் 2 · Verse 2

கேட்டார் அவர்தம் தோழர்கள்;Kaettaar avardham thozhargal;

ஐயா! உமக்குண்டேAiyaa! Umakkundae

காணாமற் போகா ஆடுகள்Kaanaamar pogaa aadugal

தொண்ணூறும் ஒன்பதும்.Thonnoorum onbadhum.

இக்காரிருளில் போவதேன்?Ikkaarirulil povadhaen?

ஓர் ஆட்டைத் தேடி அலைவதேன்? (2)Or aattaith thaedi alaivadhaen? (2)

சரணம் 3 · Verse 3

நல் மேய்ப்பரோ அக்காட்டினில்Nal Maeipparo akkaattinil

அலைந்து சென்றுமேAlaindhu sendrumae

ஓர் பாழ்க்கிடங்கில் ஏங்கினOr paazhkkidangil engina

அவ்வேழை ஆட்டையேAvvaezhai aattaiyae

மார்ப்போடு அணைத்துக் காத்தார்;Maarppodu anaiththuk kaaththaar;

தம் வீட்டினிலே கொண்டு சேர்த்தார். (2)Tham veettinilae kondu saerththaar. (2)

சரணம் 4 · Verse 4

நல் நேசரே! உம் பாதங்கள்Nal Naesarae! Um paadhangal

பீறுண்டு போனதேன்?Peerundu ponadhaen?

உம் தூய அங்கி சேற்றினில்Um thooya angi saetrinil

அமிழ்ந்து போனதேன்?Amizhndhu ponadhaen?

அவ்வேழை ஆட்டை மீட்க நீர்Avvaezhai aattai meetka neer

இக்கோலம் ஆனீரோ, ஏசுவே? (2)Ikkolam aaneero, Esuvae? (2)

சரணம் 5 · Verse 5

காணாமற் போன ஆட்டை நான்Kaanaamar pona aattai naan

கண்டேன் சந்தோஷியும்Kandaen sandhoshiyum

என்றே தூதர்கள் வானிலேEndrae thoodhargal vaanilae

ஆர்ப்பரித்தார்களே.Aarppariththaargalae.

காணாமற் போன ஆட்டை நான்Kaanaamar pona aattai naan

கண்டேன் கன்மலை மீதினிலே (2)Kandaen kanmalai meedhinilae (2)