Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #68

மெய் ஜோதியாம் என் நேசரே

Sun of My Soul, Thou Saviour Dear · Mei jothiyaam en Naesarae

மாலை ஆராதனை · Evening Service · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

மெய் ஜோதியாம் என் நேசரே!Mei jothiyaam en Naesarae!

நீர் தங்கினால் ராவில்லையே;Neer thanginaal raavillaiyae;

என் நெஞ்சுக் கும்மை மறைக்கும்En nenjuk kummai maraikkum

மேகம் வராமல் காத்திடும்.Maegam varaamal kaaththidum.

சரணம் 2 · Verse 2

உம் நேச மார்பில் என்றுமேUm naesa maarbil endrumae

நான் சாய்ந்து வாழ்தல் இன்பமே,Naan saaindhu vaazhdhal inbamae,

என்று நான் படுக்கையிலும்Endru naan padukkaiyilum

சிந்திக்க ஏவியருளும்.Sindhikka eviyarulum.

சரணம் 3 · Verse 3

என்னோடு தங்கும் பகலில்Ennodu thangum pagalil

சுகியேன் நீர் இல்லாவிடில்;Sugiyaen neer illaavidil;

என்னோடு தங்கும் ராவிலும்,Ennodu thangum raavilum,

நீர் தாங்கின் அஞ்சேன் சாவிலும்.Neer thaangin anjaen saavilum.

சரணம் 4 · Verse 4

இன்றைக்குத் திவ்ய அழைப்பைIndraikkuth dhivya azhaippai

அசட்டை செய்த பாவியைAsattai seidha paaviyai

நீர் கைவிடாமல், இப்போதேNeer kaividaamal, ippodhae

இழுத்துக் கொள்ளும், மீட்பரே!Izhuththuk kollum, Meetparae!

சரணம் 5 · Verse 5

நோயுற்றோரைக் கண்ணோக்கிடும்,Noyutroraik kannokkidum,

வறியோரை விசாரியும்;Variyorai visaariyum;

துக்கிப்போர் சிசு போலவேThukkippor sisu polavae

அமர்ந்து தூங்கச் செய்யுமே.Amarndhu thoongach seiyumae.

சரணம் 6 · Verse 6

விழிக்கும் போதென்னருகில்,Vizhikkum podhennarugil,

நீர் வந்து என்றன் வேலையில்Neer vandhu endran vaelaiyil

உம் அருள் தந்து காத்திடும்Um arul thandhu kaaththidum

என் ஆயுள் காலம் முழுதும்.En aayul kaalam muzhudhum.