என்னோடிரும், என் நேச கர்த்தரே,Ennodirum, en naesa Karththarae,
வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே;Velicham mangi iruttaayitrae;
மற்றோர் ஒத்தாசை அற்றுப் போயினும்Matror oththaasai atrup poyinum
நீர் மெய்ச் சகாயரே, என்னோடிரும்.Neer meich sagaayarae, ennodirum.
நீர் மேலே குமிழ் போல் என் ஆயுசும்Neer maelae kumizh pol en aayusum
இம்மையின் இன்ப வாழ்வும் நீங்கிடும்;Immaiyin inba vaazhvum neengidum;
கண்கண்ட யாவும் மாறிப் போயினும்,Kanganda yaavum maarip poyinum,
மாறாத கர்த்தரே, என்னோடிரும்.Maaraadha Karththarae, ennodirum.
நீர் கூட நின்று தாங்கி வாருமே,Neer kooda nindru thaangi vaarumae,
அப்போது தீமைக்கு நான் தப்புவேன்;Appodhu theemaikku naan thappuvaen;
நீர் என் துணை என் பாதை காட்டியும்Neer en thunai en paadhai kaattiyum
என் இன்ப துன்பத்தில் என்னோடிரும்.En inba thunbaththil ennodirum.
நான் அஞ்சிடேன் நீர் கூடத் தங்கினால்;Naan anjidaen neer koodath thanginaal;
என் க்லேசம் மாறும் உம் ப்ரசன்னத்தால்;En klaesam maarum um prasannaththaal;
சாவே, எங்கே உன் கூரும் ஜெயமும்?Saavae, engae un koorum jeyamum?
என்றார வாரிப்பேன் என்னோடிரும்.Endraara vaarippaen ennodirum.