Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #90

தேனிலும் மதுரம் வேதம் அல்லாமல்

Thaenilum madhuram vaedham allaamal

தேவ வசனம் · God's Word · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

தேனிலும் மதுரம் வேதம் அல்லாமல்Thaenilum madhuram vaedham allaamal

ஏதுண்டு? சொல் கண்ணே, – மிகச்Edhundu? Sol kannae, – migach

சிற்றின்ப மதனை நற்றாசை வைத்துSitrinba madhanai natraasai vaiththu

தேடுவையோ, கண்ணே?Thaeduvaiyo, kannae?

சரணம் 2 · Verse 2

காலையில் பனிபோல் சாலொமோன் மகிமைKaalaiyil panipol saalomon magimai

கரைந்தது பார் கண்ணே, – நேசKaraindhadhu paar kannae, – naesa

கர்த்தரின் வசனம் எத்தனை இன்பம்Karththarin vasanam eththanai inbam

காண்பாய், என் கண்ணே,Kaanbaai, en kannae,

சரணம் 3 · Verse 3

தோழி, சங்கீத இனிமை நற்பாகின்Thozhi, sangeetha inimai narpaagin

சுவையும் இணையோ, கண்ணே? – அருள்Suvaiyum inaiyo, kannae? – Arul

சுருதியின் வசனம் இருதயம் மகிழச்Surudhiyin vasanam irudhayam magizhach

செய்திடும் என் கண்ணே.Seidhidum en kannae.

சரணம் 4 · Verse 4

நாற்பது நாளாய்த் தீப்பசிக்காளாய்Naarpadhu naalaaith dheeppasikkaalaai

நலிந்திட்ட போதேசு, – வெகுNalindhitta podhaesu, – vegu

தாற்பரியத் தோடேய்த்த பிசாசைThaarpariyath thodaeiththa pisaasai

ஜெயித்தா ரிதனாலே.Jeyiththaa ridhanaalae.

சரணம் 5 · Verse 5

தேனிலும் தேன் கூண் டொழுகல்கள் தனிலும்Thaenilum thaen koon tozhugalgal thanilum

திவ்ய மதுர மாமே; – அதுDhivya madhura maamae; – adhu

ஜீவனுக் கமிர்தம், ஆவிக்குச் சுகிர்தம்;Jeevanuk kamirdham, aavikkuch sugirdham;

தினம் ருசித்திடு, கண்ணே.Thinam rusiththidu, kannae.