Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #92

ராஜன் தாவீதூரிலுள்ள

Once in Royal David’s City · Raajan thaaveedhoorilulla

கிறிஸ்துவின் பிறப்பு · Christ's Birth · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

ராஜன் தாவீதூரிலுள்ளRaajan thaaveedhoorilulla

மாட்டுக் கொட்டில் ஒன்றிலே,Maattuk kottil ondrilae,

கன்னி மாதா பாலன் தன்னைKanni maadhaa paalan thannai

முன்னணையில் வைத்தாரே;Munnanaiyil vaiththaarae;

மாதா மரியம்மாள் தான்Maadhaa mariyammaal thaan

பாலன் ஏசுக்கிறிஸ்துதான்.Paalan Esukkiristhudhaan.

சரணம் 2 · Verse 2

தேவனால் அனுப்பப்பட்டDevanaal anuppappatta

உலக ரட்சகர் தாம்Ulaga Ratchagar thaam

அவர் வீடோ மாட்டுக் கொட்டில்,Avar veedo maattuk kottil,

தொட்டிலோ முன்னணையாம்Thottilo munnanaiyaam

ஏழையோடு ஏழையாய்Ezhaiyodu ezhaiyaai

வாழ்ந்தார் பூவில் தாழ்மையாய்.Vaazhndhaar poovil thaazhmaiyaai.

சரணம் 3 · Verse 3

சாந்தமுள்ள கன்னி கையில்Saandhamulla kanni kaiyil

பாலனாகத் தூங்கினார்;Paalanaagath thoonginaar;

தம் மாதாவை நோக்கிப் பார்த்து,Tham maadhaavai nokkip paarththu,

நேசத்தோடு வளர்ந்தார்;Naesaththodu valarndhaar;

அவர் போல் கீழ்ப்படிவோம்;Avar pol keezhppadivom;

சாந்தத்தோடு நடப்போம்.Saandhaththodu nadappom.

சரணம் 4 · Verse 4

பாலர்க் கேற்ற பாதை காட்டப்Paalark kaetra paadhai kaattap

பாலனாக வளர்ந்தார்;Paalanaaga valarndhaar;

பலவீன மாந்தன் போலத்Palaveena maandhan polath

துன்பம், துக்கம் சகித்தார்;Thunbam, thukkam sagiththaar;

இன்ப துன்ப நாளிலும்Inba thunba naalilum

துணை செய்வார் நமக்கும்.Thunai seivaar namakkum.

சரணம் 5 · Verse 5

நம்மை மீட்ட நேசர் தம்மைக்Nammai meetta Naesar thammaik

கண்ணால் கண்டுகளிப்போம்;Kannaal kandugalippom;

அவர் தாமே நித்ய ராஜ்யAvar thaamae nithya raajya

நாதர் என்று அறிவோம்;Naathar endru arivom;

பாலரை அன்பாகவேPaalarai anbaagavae

தம்மிடத்தில் சேர்ப்பாரே.Thammidaththil saerppaarae.

சரணம் 6 · Verse 6

மாட்டுத் தொழுவத்தில் அல்ல;Maattuth thozhuvaththil alla;

ராஜ ஆசனத்திலும்,Raaja aasanaththilum,

ஏழைக் கோலமாக அல்ல,Ezhaik kolamaaga alla,

ராஜ க்ரீடஞ் சூடியும்Raaja kreedanj soodiyum

ரட்சகர் வீற்றிருப்பார்;Ratchagar veetriruppaar;

பாலர் சூழ்ந்து போற்றுவார்.Paalar soozhndhu potruvaar.