ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்Raakkaalam pethlaem Maeippargal
தம் மந்தை காத்தனர்;Tham mandhai kaaththanar;
கர்த்தாவின் தூதன் இறங்கKarththaavin thoodhan iranga
விண் ஜோதி கண்டனர்.Vin jothi kandanar.
அவர்கள் அச்சங்கொள்ளவும்,Avargal achangollavum,
விண் தூதன் திகில் ஏன்?Vin thoodhan thigil en?
எல்லாருக்கும் சந்தோஷமாம்Ellaarukkum sandhoshamaam
நற்செய்தி கூறுவேன்.Narcheidhi kooruvaen.
தாவீதின் வம்சம் ஊரிலும்,Thaaveedhin vamsam oorilum,
மெய் கிறிஸ்து நாதனார்Mei Kiristhu naathanaar
பூலோகத்தார்க்கு ரட்சகர்Boologaththaarkku Ratchagar
இன்றைக்குப் பிறந்தார்.Indraikkup pirandhaar.
இதுங்கள் அடையாளமாம்,Idhungal adaiyaalamaam,
முன்னணை மீது, நீர்Munnanai meedhu, neer
கந்தை பொதிந்த கோலமாய்Kandhai podhindha kolamaai
அப்பாலனைக் காண்பீர்.Appaalanaik kaanbeer.
என்றுரைத்தான்; அக்ஷணமேEndruraiththaan; akshanamae
விண்ணோராம் கூட்டத்தார்Vinnoraam koottaththaar
அத்தூதனோடு தோன்றியேAththoodhanodu thondriyae
கர்த்தாவைப் போற்றினர்.Karththaavaip potrinar.
மா உன்னதத்தில், ஆண்டவா,Maa unnadhaththil, Aandavaa,
நீர் மேன்மை அடைவீர்;Neer maenmai adaiveer;
பூமியில் சமாதானமும்Boomiyil samaadhaanamum
நல்லோர்க்கு ஈகுவீர்.Nallorkku eeguveer.