Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #99

வானலோக தூதர்களே

Angels from the Realms of Glory · Vaanaloga thoodhargalae

கிறிஸ்துவின் பிறப்பு · Christ's Birth · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

வானலோக தூதர்களே!Vaanaloga thoodhargalae!

பூலோகெங்கும் செல்லுங்கள்.Boologengum sellungal.

மேசியாவின் பிறப்பினைMaesiyaavin pirappinai

பறை சாற்றிடுங்களேன்.Parai saatridungalaen.

ஆராதிப்போம் ஆராதிப்போம்Aaraadhippom aaraadhippom

பாலகன் நம் ராஜனை.Paalagan nam raajanai.

சரணம் 2 · Verse 2

மந்தையினை மேய்த்துக் காக்கும்Mandhaiyinai maeiththuk kaakkum

வெளியின் மேய்ப்பர்களே!Veliyin Maeippargalae!

நம்மில் தங்கும் தேவ சுதன்Nammil thangum Deva Sudhan

ஒளி வீசி மின்னுதே.Oli veesi minnudhae.

கனம் செய்வோம், கனம் செய்வோம்Kanam seivom, kanam seivom

பாலகன் எம் ராஜனை.Paalagan em raajanai.

சரணம் 3 · Verse 3

நீதிமான்கள் நீங்கள் எல்லாம்Needhimaangal neengal ellaam

வீண் சிந்தனை மறப்பீர்.Veen sindhanai marappeer.

பிறப்பின் நட்சத்ரம் கண்டு,Pirappin natchathram kandu,

வாஞ்சிப்போம் அக்காட்சியை,Vaanjippom akkaatchiyai,

துதி செய்வோம், துதி செய்வோம்,Thudhi seivom, thudhi seivom,

பாலகன் நம் ராஜனை.Paalagan nam raajanai.

சரணம் 4 · Verse 4

பக்தரே! நீவீர் யாவரும்Baktharae! Neeveer yaavarum

பயத்தோடு தொழுவீர்.Bayaththodu thozhuveer.

திடீரெனக் கர்த்தர்தாமேThideerenak Karththardhaamae

தோன்றிக் காட்சி தருவார்.Thondrik kaatchi tharuvaar.

ஆராதிப்போம், ஆராதிப்போம்,Aaraadhippom, aaraadhippom,

பாலகன் நம் ராஜனை.Paalagan nam raajanai.