Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #110 (new ed.) · #199 (old ed.)

வழி நடத்தும் வல்ல தேவன்

Vazhi nadaththum valla Devan

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

வழி நடத்தும் வல்ல தேவன்Vazhi nadaththum valla Devan

வாழ்வில் நாயகனேVaazhvil naayaganae

வாழ்வில் நாயகனே – நம்Vaazhvil naayaganae – nam

தாழ்வில் நாயகனேThaazhvil naayaganae

சரணம் 1 · Verse 1

பரதேசப் ப்ரயாணிகளேParadhaesap prayaanigalae

நாம் வாழும் பாரினிலேNaam vaazhum paarinilae

பரமானந்தத்தோடே செல்வோம்Paramaanandhaththodae selvom

பரமன் நாட்டிற்கே – இயேசுParaman naattirkae – Yesu

பரன் தம் வீட்டிற்கேParan tham veettirkae

பல்லவி · Chorus

வழி நடத்தும் வல்ல தேவன்Vazhi nadaththum valla Devan

வாழ்வில் நாயகனேVaazhvil naayaganae

வாழ்வில் நாயகனே – நம்Vaazhvil naayaganae – nam

தாழ்வில் நாயகனேThaazhvil naayaganae

சரணம் 2 · Verse 2

அந்தகார சக்திகள்Andhagaara sakthigal

எமை அணுகிடாமலேEmai anugidaamalae

சொந்தமான தம் ஜனத்தைச்Sondhamaana tham janaththaich

சூழ்ந்து காப்பாரே – இயேசுSoozhndhu kaappaarae – Yesu

துணையாய் நிற்பாரே.Thunaiyaai nirpaarae.

பல்லவி · Chorus

வழி நடத்தும் வல்ல தேவன்Vazhi nadaththum valla Devan

வாழ்வில் நாயகனேVaazhvil naayaganae

வாழ்வில் நாயகனே – நம்Vaazhvil naayaganae – nam

தாழ்வில் நாயகனேThaazhvil naayaganae

சரணம் 3 · Verse 3

வாதை நோய்கள் வன்துன்பங்கள்Vaadhai noigal vandhunbangal

வருத்திய போதும்Varuththiya podhum

பாதையில் நாம் சோர்ந்திடாமல்Paadhaiyil naam sorndhidaamal

பலப்படுத்திடுவார் – இயேசுPalappaduththiduvaar – Yesu

திடப்படுத்திடுவார்.Thidappaduththiduvaar.

பல்லவி · Chorus

வழி நடத்தும் வல்ல தேவன்Vazhi nadaththum valla Devan

வாழ்வில் நாயகனேVaazhvil naayaganae

வாழ்வில் நாயகனே – நம்Vaazhvil naayaganae – nam

தாழ்வில் நாயகனேThaazhvil naayaganae