Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #235 (old ed.)

விண் ஏகும்முன்

Vin egummun

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

விண் ஏகும்முன் நல் வார்த்தையைVin egummun nal vaarththaiyai

நம் மீட்பர் மொழிந்தார்Nam Meetpar mozhindhaar

மா நித்திய ஆறுதலைMaa niththiya aarudhalai

வாக்களித்தார்.Vaakkaliththaar.

சரணம் 2 · Verse 2

அவ்வாறு வல்ல ஆவியேAvvaaru valla aaviyae

சகாயராய் வந்தார்,Sagaayaraai vandhaar,

மெய்ப் பக்தர் நைந்த நெஞ்சிலேMeip bakthar naindha nenjilae

சஞ்சரிப்பார்.Sanjarippaar.

சரணம் 3 · Verse 3

ஆகாத சிந்தை தோன்றினால்Aagaadha sindhai thondrinaal

மேலிடவே ஒட்டார்,Maelidavae ottaar,

வீண் பயமும் மென் சொல்லினால்Veen bayamum men sollinaal

அகற்றுவார்.Agatruvaar.

சரணம் 4 · Verse 4

நற்குணம், செய்கை விருப்பம்Narkunam, seigai viruppam

மெய்ப் பக்தி யாவுமேMeip bakthi yaavumae

தேவாவியாலே மாத்திரம்Devaviyaalae maaththiram

உண்டாகுமே.Undaagumae.

சரணம் 5 · Verse 5

மா தூய நேச ஆவியே,Maa thooya naesa aaviyae,

தாசர்க் கிரங்குமேThaasark kirangumae

சுத்தாங்கம் தந்து நெஞ்சிலேSuththaangam thandhu nenjilae

வந்தாளுமே.Vandhaalumae.