Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #149 (new ed.) · #324 (old ed.)

ஆனந்தமே பரமானந்தமே

Aanandhamae Paramaanandhamae

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

ஆனந்தமே பரமானந்தமேAanandhamae Paramaanandhamae

இயேசு அண்ணலைYesu annalai

அண்டினோர்க் கானந்தமே.Andinork kaanandhamae.

சரணம் 1 · Verse 1

இந்தப்புவி ஒரு சொந்தம் அல்ல என்றுIndhappuvi oru sondham alla endru

இயேசு என் நேசர் மொழிந்தனரேYesu en Naesar mozhindhanarae

இக்கட்டு துன்பமும் இயேசுவின் தொண்டர்க்குIkkattu thunbamum Iyaesuvin thondarkku

இங்கேயே பங்காய்க் கிடைத்திடினும்.Ingaeyae pangaaik kidaiththidinum.

பல்லவி · Chorus

ஆனந்தமே பரமானந்தமேAanandhamae Paramaanandhamae

இயேசு அண்ணலைYesu annalai

அண்டினோர்க் கானந்தமே.Andinork kaanandhamae.

சரணம் 2 · Verse 2

கர்த்தாவே நீர் எந்தன்Karththaavae neer endhan

காருண்யக் கோட்டையே,Kaarunyak kottaiyae,

காரணமின்றிக் கலங்கேனே யான்Kaaranamindrik kalangaenae yaan

விசுவாசப் பேழையில் மேலோகம் வந்திடVisuvaasap paezhaiyil maelogam vandhida

மேவியே சுக்கான் பிடித்திடுமே.Maeviyae sukkaan pidiththidumae.

பல்லவி · Chorus

ஆனந்தமே பரமானந்தமேAanandhamae Paramaanandhamae

இயேசு அண்ணலைYesu annalai

அண்டினோர்க் கானந்தமே.Andinork kaanandhamae.

சரணம் 3 · Verse 3

என்னுள்ளமே உன்னில்Ennullamae unnil

சஞ்சலம், ஏன் வீணாய்க்Sanjalam, en veenaaik

கண்ணீரின் பள்ளத்தாக்கல்லோ இதுKanneerin pallaththaakkallo idhu

சீயோன் நகரத்தில் சீக்கிரம் சென்று நாம்Seeyon nagaraththil seekkiram sendru naam

ஜெயகீதம் பாடி மகிழ்ந்திடலாம்.Jeyageetham paadi magizhndhidalaam.

பல்லவி · Chorus

ஆனந்தமே பரமானந்தமேAanandhamae Paramaanandhamae

இயேசு அண்ணலைYesu annalai

அண்டினோர்க் கானந்தமே.Andinork kaanandhamae.

சரணம் 4 · Verse 4

கூடார வாசிகள் ஆகும் நமக்கிங்குKoodaara vaasigal aagum namakkingu

வீடென்றும் நாடென்றும் சொல்லலாமோ?Veedendrum naadendrum sollalaamo?

கை வேலையல்லாத வீடொன்றை மேலேKai vaelaiyallaadha veedondrai maelae

தான் செய்வேன் எனச் சொல்லிப்Thaan seivaen enach sollip

போகலையோ?Pogalaiyo?

பல்லவி · Chorus

ஆனந்தமே பரமானந்தமேAanandhamae Paramaanandhamae

இயேசு அண்ணலைYesu annalai

அண்டினோர்க் கானந்தமே.Andinork kaanandhamae.

சரணம் 5 · Verse 5

துன்பங்கள் தொல்லைThunbangal thollai

இடுக்கண் இடர் இவைத்Idukkan idar ivaith

தொண்டர் எமை அண்டி வந்திடினும்Thondar emai andi vandhidinum

சொல்லி முடியாத ஆறுதல் கிருபையைSolli mudiyaadha aarudhal kirupaiyai

துன்பத்தினூடே அனுப்பிடுவார்.Thunbaththinoodae anuppiduvaar.

பல்லவி · Chorus

ஆனந்தமே பரமானந்தமேAanandhamae Paramaanandhamae

இயேசு அண்ணலைYesu annalai

அண்டினோர்க் கானந்தமே.Andinork kaanandhamae.

சரணம் 6 · Verse 6

இயேசுவே சீக்கிரம்Iyaesuvae seekkiram

இத்தரை வாருமேன்Iththarai vaarumaen

ஏழை வெகுவாய்க் கலங்குகிறேன்.Ezhai veguvaaik kalangugiraen.

என் நேசர் தன் முக ஜோதியேயல்லாமல்En Naesar than muga jothiyaeyallaamal

இன்பம் தரும் பொருள் ஏதுமில்லை.Inbam tharum porul edhumillai.

பல்லவி · Chorus

ஆனந்தமே பரமானந்தமேAanandhamae Paramaanandhamae

இயேசு அண்ணலைYesu annalai

அண்டினோர்க் கானந்தமே.Andinork kaanandhamae.