Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #160 (new ed.) · #335 (old ed.)

உலகோர் உன்னைப்

Ulagor unnaip

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

உலகோர் உன்னைப் பகைத்தாலும்Ulagor unnaip pagaiththaalum

உண்மையாய் அன்பு கூருவாயா?Unmaiyaai anbu kooruvaayaa?

உற்றார் உன்னை வெறுத்தாலும்Utraar unnai veruththaalum

உந்தன் சிலுவை சுமப்பாயா?Undhan siluvai sumappaayaa?

பல்லவி · Chorus

உனக்காக நான் மரித்தேனேUnakkaaga naan mariththaenae

எனக்காக நீ என்ன செய்தாய்?Enakkaaga nee enna seidhaai?

சரணம் 2 · Verse 2

உலக மேன்மை அற்பம் என்றும்Ulaga maenmai arpam endrum

உலக ஆஸ்தி குப்பை என்றும்Ulaga aasthi kuppai endrum

உள்ளத்தினின்று கூருவாயா?Ullaththinindru kooruvaayaa?

ஊழியம் செய்ய வருவாயா?Oozhiyam seiya varuvaayaa?

பல்லவி · Chorus

உனக்காக நான் மரித்தேனேUnakkaaga naan mariththaenae

எனக்காக நீ என்ன செய்தாய்?Enakkaaga nee enna seidhaai?

சரணம் 3 · Verse 3

மேய்ப்பன் இல்லாத ஆடுகள் போல்Maeippan illaadha aadugal pol

மேய்கிறார் பாவப் புல் வெளியில்Maeigiraar paavap pul veliyil

மேய்ப்பன் இயேசுவை அறிந்த நீயும்Maeippan Iyaesuvai arindha neeyum

மேன்மையை நாடி ஓடுகின்றாயா?Maenmaiyai naadi odugindraayaa?

பல்லவி · Chorus

உனக்காக நான் மரித்தேனேUnakkaaga naan mariththaenae

எனக்காக நீ என்ன செய்தாய்?Enakkaaga nee enna seidhaai?

சரணம் 4 · Verse 4

இயேசு என்றால் என்ன விலைYesu endraal enna vilai

என்றே கேட்டிடும் எத்தனை பேர்Endrae kaettidum eththanai paer

பிள்ளைகள் அப்பம் கேட்கின்றனர்Pillaigal appam kaetkindranar

ஜீவ அப்பம் கொடுப்பாயா?Jeeva appam koduppaayaa?

பல்லவி · Chorus

உனக்காக நான் மரித்தேனேUnakkaaga naan mariththaenae

எனக்காக நீ என்ன செய்தாய்?Enakkaaga nee enna seidhaai?